கங்குவா
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள கங்குவா திரைப்படம் வரும் நவம்பர் 14 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா இப்படத்தை பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரித்துள்ளார். தமிழ், இந்தி , கன்னடம் , மலையாளம் , தெலுங்கு , ஆங்கிலம் , ஸ்பேனிஷ் , பிரெஞ்சு உள்ளிட்ட ஆறு மொழிகளில் கங்குவா திரைப்படம் வெளியாக இருக்கிறது. இப்படத்தை பான் இந்திய வெற்றிப்படமாக்க வேண்டும் என்பதில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா உறுதியாக இருக்கிறார். கங்குவா திரைப்படம் 2000 கோடி வசூல் செய்யும் என்று ஞானவேல் ராஜா உறுதியாக தெரிவித்துள்ளார். கங்குவா படத்தை தயாரிக்க தனக்கு மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன் ராஜமெளலி என ஞானவேல்ராஜா பட இடங்களில் தெரிவித்துள்ளார். கடந்த ஐந்து ஆண்டுகளாக ராஜமெளலியின் ஃபோட்டோவை தனது செல்ஃபோனில் வால்பேப்பராக வைத்துள்ளதாக ஞானவேல் ராஜா தெரிவித்துள்ளார்.
ராஜமெளலி பற்றி ஞானவேல்ராஜா
" கங்குவா மாதிரி இவ்வளவு பிரம்மாண்டமான படத்தை தயாரிக்க எனக்கு மிகப்பெரிய இன்ஸ்பிரேஷனாக இருந்தது பாகுபலி பட இயக்குநர் ராஜமெளலி தான். கடந்த ஐந்து ஆண்டுகளாக என் ஃபோனில் அவர் படத்தை தான் வால்பேப்பராக வைத்திருக்கிறேன். ஒவ்வொரு முறை நான் ஃபோன் எடுக்கும் போது நான் ஏதாவது ஒரு பெரிய முடிவு எடுக்க வேண்டிய சூழல் இருக்கும். ராஜமெளலியின் புகைப்படம் என்னை ஏதாவது பெரிதாக செய் என்று எச்சரித்துக்கொண்டே இருக்கும். " என ஞானவேல் ராஜா தெரிவித்தார்.
ராஜமெளலி பற்றி சூர்யா
ராஜமெளலி இயக்கிய மாவீரன் படத்தில் சூர்யாவுக்கு அழைப்பு வந்தது. ஆனால் சூர்யா அந்த படத்தில் நடிக்க மறுத்துவிட்டார். கங்குவா படத்தின் ஹைதராபாத் ப்ரோமோஷனில் பேசிய சூர்யா இப்படி கூறினார் " ராஜமெளலி சார் படத்தில் நடிக்கும் வாய்ப்பை நான் இழந்தது என்னுடைய துரதிர்ஷ்டம். கங்குவா படத்தைப் பார்த்து ராஜமெளி சார் பாராட்டினார் என்றால் அதுவே எங்களுக்கு ஆஸ்கர் விருது மாதிரி'