கங்குவா இசை வெளியீடு


சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள கங்குவா திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா அக்டோபர் 26 ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது. இப்படத்தில்  நடிகர் பாபி தியோல் , திஷா பதானி , கருணாஸ் , யோகி பாபு , போஸ் வெங்கட் , கே.எஸ் ரவிகுமார் , நட்டி ஆகியவர்கள் நடித்துள்ளார்கள். வெற்றி இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். தேவிஶ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.


கங்குவா இசை வெளியீட்டில் சூர்யா


"நான் இருப்பது , மூச்சு விடுவது எல்லாமே இந்த அன்பான ரசிகர்களால்தான். பல ஊர்களில் இருந்து இந்த நிகழ்ச்சியை கொண்டாட வந்திருக்கிறீர்கள் அதற்கு எவ்வளவு  நன்றி சொன்னாலும் பத்தாது" என் ரத்தமும் உன் ரத்தமும் வேறு வேறா" என்று பேசினார் சூர்யா. இதெல்லாம் சரி ஒருத்தர் நடந்து வரும்போது மட்டும் சத்தம் கொஞ்சம் அதிகமாக இருந்ததே எனக்காக வந்தீங்களா இல்ல திஷா பதானிக்காக வந்தீங்களா? சூப்பர்ஸ்டார் ரஜினிக்கு ரொம்ப நன்றி. இந்த 27 வருடம் இன்னும் என்னால் உங்களுடைய அன்பை சம்பாதிக்க முடிகிறது என்றால் அது என்னுடைய இயக்குநர்களுக்கும் என்னுடைய தயாரிப்பாளர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.


கார்த்தி சினிமாவுக்கு வந்ததற்கு காரணம் ஞானவேல் தான். என்னோட படங்களின் வளர்ச்சிக்கு ஞானவேல் ஒரு பெரிய காரணம். இந்த படத்தை உருவாக்க மட்டுமே அவர் எவ்வளவு போர்களை மனதில் சந்தித்திருக்கிறார் என்று எனக்கு தெரியும். நீ ஒருத்தன் இல்லாட்டி இது நடந்திருக்காது.


பாபி தியோல் இன்னொரு தாயிடம் இருந்து எனக்கு கிடைத்த சகோதரர். நான் அவரை நிறைய சைட் அடிச்சிருக்கேன். இத்தனை வருடங்களாக நாம் ஏன் சேர்ந்து நடிக்கவில்லை என்று நினைக்கிறேன். இந்த பயணம் இன்னும் தொடரும் என்று நான் நம்புகிறேன். போஸ் வெங்கட் இந்த மேடையை வேற மாதிரி மாத்திவிட்டார். யோகிபாபு ஒரு இண்டலிஜண்ட் நடிகர். எங்களுக்கு பொழுது போகவில்லை என்றால் ஒளிப்பதிவாளர் வெற்றியை கூப்பிட்டு தான் பேசுவோம். இந்த படத்திற்கு லைட்டே இல்லாமல் நேச்சுரல் லைட்டை வைத்து தான் எடுப்பேன் என்று உறுதியாக இருந்தார்.அவரும் அவரோட டீமும் சேர்ந்து போர் வீரர்கள் மாதிரி வேலை செய்தார்கள். சிவா என்ன நினைக்கிறாரோ அது வெற்றிக்கு கேட்டுவிடும். ஒரு ஷாட்டில் மூவாயிரம் பேர் இருப்பார்கள் அத்தன பேர் மேலயும் சிவாவின் கண்ணு இருக்கும். 


கலை என்பதே நம் சமூகத்தில் ஒரு குரல் மாதிரி. அதன் மூலமாக தான் ஒரு சமூக மேம்படும் என்று நான்  நம்புகிறேன். அந்த வகையில் மெய்யழகன் படத்தை நான் ஒரு மருந்து மாதிரி பார்க்கிறேன். அதே போல் 27 வருடத்திற்கு பின் சிவா கொண்டு வந்திருக்கும் கங்குவா திரைப்படம் இதுவரை யாரும் பார்த்திராத ஒரு அனுபவமாக இருக்கும். இந்த படம் தமிழ் சினிமாவை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் செல்லும். 170 நாள் எப்படி போச்சுனு எங்களுக்கு தெரியல. தினமும் சந்தோஷமாக வீட்டிற்கு வந்திருக்கிறோம். இந்த படம் ஒரு பெரிய தல வாழை இலை விருந்து. சிவா உடன் பயணித்ததில் இருந்து எனக்கு இரண்டு முக்கியமான படம் கிடைத்தது. அதைதான் நாம் எல்லாரும் பின்பற்ற வேண்டும் என நினைக்கிறேன். என்ன நடந்தாலும் நல்லதே நடக்கும் என்று சிவா என்னிடம் சொன்னார். அதனால் தான் இவ்ளோ பெரிய படத்தை எங்களால் உருவாக்க முடிந்தது. 


"இந்த படத்தில் நாங்கள் 3000 பேர் வேலை செய்திருக்கிறோம். நாங்கள் வேலை செய்தபோது எங்கள் குடும்பத்தை பார்த்துக்கொண்ட பெண்களுக்கு நாங்கள் அனைவரும் தலை வணங்குகிறேன்" என சூர்யா தெரிவித்துள்ளார்.