Rajinikanth : கங்குவா எனக்கு பண்ண கதை...கங்குவா ஆடியோ லாஞ்சில் வீடியோ மூலம் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்

இயக்குநர் சிறுத்தை சிவாவிடம் தான் ஒரு பீரியட் கதை பண்ண வேண்டும் என்று கேட்டுக்கொண்டதாக கங்குவா இசை வெளியீட்டில் நடிகர் ரஜினிகாந்த் காணொளி மூலம் பேசினார்

Continues below advertisement

கங்குவா இசை வெளியீடு

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள கங்குவா வரும் நவம்பர் 14 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில் கங்குவா படத்தின் இசை வெளியீடு நிகழ்ச்சி இன்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் மாலை 6 மணிக்கு தொடங்கியது. சூர்யா நடிப்பில் கடந்த இரண்டரை ஆண்டுகளில் படம் வெளியாகாத நிலையில் சூர்யா ரசிகர்கள் இந்த படத்திற்காக மிக ஆவலாக காத்திருக்கிறார்கள். அதே போல் சூர்யா இன்று நிகழ்ச்சியில் பேசுவதை கேட்கவும் ரசிகர்கள் அரங்கத்தில் காத்திருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சியில் நடிகர் சூர்யா , இயக்குநர் சிவா , நடிகர் பாபி தியோல் , மதன் கார்க்கி , நடிகர் சிவகுமார் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டார்கள். இந்த நிகழ்ச்சியில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் காணொளி மூலம் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

Continues below advertisement

கங்குவா இசைவெளியீட்டில் ரஜினி

" இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நான் ஒரு படம் பண்ணியிருக்கேன். ஆனால் ஒரு 25 படங்கள் சேர்ந்து வேலை செய்தது மாதிரி ஒரு உறவு எங்களுக்கு இடையில் ஏற்பட்டிருக்கிறது. சிவா குழந்தை மாதிரி மனிதர் வேலையைத் தவிர அவருக்கு ஒன்றும் தெரியாது. சிவா நீங்கள் ஒரு பீரியட் கதை எனக்காக பண்ண வேண்டும் என்று சிவாவிடம் சொன்னேன். கங்குவா சிவா எனக்கு பண்ண கதைதான். அதை அவர் ஞானவேலிடம் சொல்லி சூர்யா இந்த படத்தை செய்துகட்டியிருக்கிறார். சூர்யாவைப் பற்றி சொல்ல வேண்டும் என்றால் அவருடை தந்தையின் எல்லா குனமும் அவருக்கு இருக்கிறது. எப்போதும் புதிதாத எதையாவது செய்ய வேண்டும் என்பதே அவரது நோக்கமாக இருந்திருக்கிறது. இந்த படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா ஒரு மிகப்பெரிய சினிமா காதலன். சினிமாவைப் பற்றி அவருக்கு தெரியாததே கிடையாது. ஒரு படத்தை எப்படி எடுக்க வேண்டும் எப்படி ப்ரோமோட் செய்ய வேண்டும் என்பது அவருக்கு தெரியும்" என்று ரஜினி பேசினார்

Continues below advertisement
Sponsored Links by Taboola