கங்குவா படத்துக்காக நடிகர் சூர்யா வெறித்தனமாக ஒர்க் அவுட் செய்து உடல் மெருகேற்றியிருக்கும் புகைப்படம் வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது.
சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து வரும் கங்குவா படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. சூர்யாவின் திரைப்பயணத்திலேயே பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள திரைப்படம் இதுதான் எனக் கூறப்படுகிறது.
சூர்யாவின் 42ஆவது படமான கங்குவாவுக்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் நிலையில், திஷா பதானி, மிருணாள் தாகூர் ஆகியோர் சூர்யாவுக்கு நாயகிகளாக நடிப்பதாகக் கூறப்படுகிறது.
ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் ஞானவேல் ராஜா இப்படத்தைத் தயாரிக்கும் நிலையில், 10 மொழிகளில் பான் இந்தியா திரைப்படமான இப்படம் உருவாகி வருகிறது. சூர்யா 10க்கும் மேற்பட்ட கெட்-அப்களில் இப்படத்தில் நடிப்பதாகக் கூறப்படும் நிலையில், இந்தப் படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக கடந்த ஜூலை 23ஆம் தேதி நடிகர் சூர்யாவின் பிறந்தநாளை ஒட்டி இப்படத்தின் க்ளிம்ஸ் வீடியோ வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும் 24 மணி நேரத்தில் அதிகம் பார்வையாளர்களைப் பெற்ற க்ளிம்ஸ் வீடியோ எனும் சாதனையையும் இந்த வீடியோ பெற்றது.
தற்போது சென்னை, ஈவிபி ஃபிலிம் சிட்டியில் கங்குவா படப்பிடிப்பு நடைபெற்று வருவதாகக் கூறப்படும் நிலையில், சூர்யா சிக்ஸ் பேக் வைத்து உடலை முறுக்கேற்றி வரும் மாஸான புகைப்படம் ஒன்றை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் பகிர்ந்துள்ளது.
வாரணம் ஆயிரம் படத்துக்காக உடலை முறுக்கேற்றியது போல் இந்தப் புகைப்படத்திலும் சூர்யா காணப்படும் நிலையில், இந்த வீடியோவுக்கு இதயங்களைப் பகிர்ந்து சூர்யா ரசிகர்களை இணையத்தில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
கங்குவாவைத் தொடர்ந்து சுதா கொங்கராவுடனான புதிய படத்தில் சூர்யா இணைவதாக முன்னதாகத் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் சமீபத்தில் தன் ரசிகர்களை சந்தித்து கலந்துரையாடிய சூர்யா, ரோலக்ஸ் கதாபாத்திரத்தை மையமாக வைத்து லோகேஷ் கனகராஜ் தனக்கு சொன்ன கதை பிடித்திருப்பதாகவும், லோகேஷின் மற்றொரு கதையான இரும்புக்கை மாயாவி தொடங்க இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ் என ரசிகர்கள் கொண்டாடும் எல்சியுவில் ரோலக்ஸ் கதை இணையும் என்றும், லியோ படத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரம் இடம்பெறும் என்றும் கோலிவுட் வட்டாரத்தில் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
மேலும் படிக்க: Kavin Monica Wedding Pic: பாக்கு வெத்தல மாத்தி முடிச்சு பையன் வந்தாச்சு... காதலியை கரம்பிடித்த நடிகர் கவின்.. குவியும் வாழ்த்துகள்!