பாலிவுட்டில் அவ்வபோது சர்ச்சை கருத்துகளால் கவனம் பெறுபவர் நடிகை கங்கனா ரனாவத். நெப்போட்டிசம் நிறைந்த பாலிவுட்டில் தான் அதிகமான சவால்களை எதிர்க்கொண்டதாகவும் அதற்கு காரணமானவர்கள் இவர்கள்தான் என பெயர் குறிப்பிட்டே பேசும் அளவுக்கு துணிச்சல் மிக்கவர் . கங்கனா கடந்த சில வருடங்களாகவே ஃபிலிம்பேர் விருதுகளில் கலந்துக்கொள்வதில்லை . அதற்கு அவர் கூறும் காரணம் ‘புறக்கணிப்பு’ .


இந்த நிலையில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஃபிலிம்பேர் விருது வழங்கும் விழாவில் கலந்துக்கொள்ள அவரை விழா குழுவினர் அழைத்துள்ளனர். மேலும் தலைவி படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதால் அவரது பெயர் பரிந்துரை பட்டியலில் இருப்பதாகவும் கூறியிருக்கிறார்கள் . ஆனால் நிகழ்ச்சியில் பங்கேற்க மறுத்த கங்கனா , அது குறித்த பதிவு ஒன்றையும் ஷேர் செய்திருந்தார்.






ஃபிலிம்பேரை குற்றம்சாட்டிய கங்கனா :


 அதில் “ நான் 2014 ஆம் ஆண்டு முதல் filmfare போன்ற நெறிமுறையற்ற, ஊழல் மற்றும் முற்றிலும் நியாயமற்ற ஒன்றை தடை செய்துள்ளேன்.  ஆனால் இந்த ஆண்டு அவர்களின் விருது வழங்கும் விழாவில் கலந்து கொள்வதற்காக அவர்களிடமிருந்து தொடர் அழைப்புகள் வருகிறது.  எனக்கு தலைவி படத்திற்காக விருது வழங்க விரும்புகிறார்கள். அவர்கள் இன்னும் என்னை நாமினேட் செய்கிறார்கள் என்பது  எனக்கு அதிர்ச்சியாக உள்ளது. எப்படியும் இதுபோன்ற ஊழல் நடவடிக்கைகளை ஊக்குவிப்பது எனது கண்ணியம், பணி நெறிமுறைகள் மற்றும் மதிப்பு முறைக்குக் கீழே உள்ளது. அதனால்தான் filmfare மீது வழக்குத் தொடர முடிவு செய்துள்ளேன்... நன்றி,” என குறிப்பிட்டுருந்தார்.




ஃபிலிம்பேர் விளக்கம் :


 filmfare  சமூக வலைத்தள பக்கத்தினை டேக் செய்து கங்கனா ஷேர் செய்திருந்த பதிவு , சமூக வலைத்தளங்களில் வைரலாகவே தற்போது ஃபிலிம்பேர் அதற்கான விளக்கத்தை கொடுத்துள்ளது. அதில் “ இது  ரணாவத் கூறும் அப்பட்டமான பொய்யான குற்றச்சாட்டு. இந்த தேசத்தை, அதாவது இந்திய சினிமாவை ஒன்றிணைக்கும் ஒரு கூட்டுக் கொண்டாட்டத்தில் அனைவரையும் ஒன்று சேர்ப்பதுதான் எங்களின் முயற்சி. அதற்காகத்தான் அழைத்தோம். ஃபிலிம்ஃபேர் விருதுகள் என்பது சினிமாவின் சிறந்து விளங்கும் ஒரு கொண்டாட்டமாகும். மேலும் அந்த விழாவில்  பரிந்துரைக்கப்பட்டவர், பர்ஃபாம் செய்தவர் என்பதைப் பொருட்படுத்தாமல்  விருது வழங்கப்படும். மேலும், 5 முறை ஃபிலிம்பேர் விருது பெற்ற  ரனாவத், இருமுறை இல்லாத நிலையில் (2014 & 2015) விருது வழங்கப்பட்டது. அவர் பங்கேற்க மாட்டார் என தெரிந்தும் நாங்கள் விருது வழங்கினோம். ஃபிலிம்பேர் விருதுகள் குறித்து ரணாவத் தெரிவித்த பொறுப்பற்ற கருத்துக்களால், தலைவி திரைப்படத்திற்காக அவரது சிறந்த நடிகைக்கான பரிந்துரையை திரும்பப் பெறுகிறோம். எங்களின் நற்பெயரையும் நல்லெண்ணத்தையும் கெடுக்கும் அவரது தீங்கிழைக்கும் மற்றும் அவதூறான அறிக்கைகளுக்கு எதிராக எந்தவொரு சட்ட நடவடிக்கையையும் தொடர எங்களுக்கு அனைத்து உரிமைகளும் உள்ளன.” என குறிப்பிட்டுள்ளனர்.