பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவதின் இயக்கத்தில் 'எமர்ஜென்சி' படத்திற்கு தனது அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு படத்தினை உருவாக்கி வருகிறார்.  இது குறித்து ​​​​கங்கனா தனது புகைப்படங்களை ஒரு பெரிய கேப்ஷனுடன் பகிர்ந்துள்ளார். தனது இன்ஸ்டாகிராம் பதிவில், நடிகையும் எமர்ஜென்சி படத்தின் இயக்குநருமான கங்கனா ரனாவத்  புதிய புகைப்படங்களையும் பகிர்ந்து ரசிகர்களுக்கு விருந்தளித்துள்ளார். 


தனது இன்ஸ்டாகிராம் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, "இன்று ஒரு இடைவேளை நாள், நான் அதை இடைவேளை என்று குறிப்பிடமாட்டேன், நான் அதை இடைநிறுத்த நாள் என்றே குறிப்பிடவேண்டும். இதுபோன்ற ஒரு நாளில்,  நீங்கள் உங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் மூழ்கி, கரைந்து, உங்களில் எதுவும் மிச்சமில்லை என்று உணர்ந்து, நீங்கள் உங்களின்  புகைப்படங்களை ஒரு அந்நியனைப் போல பார்க்கிறீர்கள் என்றால், நீங்கள் உங்களை எங்கே இழந்தீர்கள் என்று ஆச்சரியப்படுகிறீர்கள் என்று பொருள். நீங்கள் எப்போதுமே ஒரே மாதிரியாக இருப்பீர்களா என்றும் கூட ஆச்சரியப்படுவீர்கள்.  உண்மை என்னவென்றால்,  ஒரு கதாபாத்திரத்தில் மூழ்கி விட்ட நீங்கள் மீண்டும் உங்களின் இயல்பான நபராக மாற முடியாது. மேலும் அது மிகவும் கடினம். உங்களுக்கு ஒரு நல்ல கதாபாத்திரம் கிடைக்க நேர்ந்தால், அது உங்கள் ஆன்மாவில் ஒரு வடு போலவும், இரவின் இருள் போலவும், சந்திரனின் பிரகாசத்தைப் போலவும், உங்களால் சொந்தமாக்க முடியாத உணர்வு போலவும், பிரகாசிக்கும் மில்லியன் சூரியன்களைப் போலவும், தலையைச் சுற்றும் மலைகளின் உயரங்களைப் போலவும் இருக்கும். மூச்சுத்திணறல்  உண்டாக்கும் கடலின் ஆழம் போல, ஒரு கதாபாத்திரம் உங்களைப் பொருட்படுத்தாமல் இருக்கும்  என அவர் குறிப்பிட்டுள்ளார்.






கங்கனாவின் இன்ஸ்டாகிராம் பதிவில் உள்ள புகைபுகைப்படத்தில், கங்கனா இந்திரா காந்தியின் உடையில் கேமராவுடன் காட்சியளிக்கிறார். அடுத்த புகைபடத்தில், நடிகர் ஒரு  இளஞ்சிவப்பு உடையில் லேசான மேக்கப் மற்றும் இளஞ்சிவப்பு லிப்ஸ்டிக் உதடுகளுடனும் ஒரு புகைபடத்தைப் பகிர்ந்துள்ளார்.  கங்கனாவின் இந்த பதிவிற்கு,  எமர்ஜென்சி படத்தின் இணை நடிகர் அனுபம் கெர் கமெண்ட் பின்வருமாறு செய்துள்ளார். "இதை நீங்கள் நன்றாக எழுதியிருக்கிறீர்கள். ஒவ்வொரு 'நல்ல' நடிகரும் நீங்கள் எழுதியதை ஒப்புக்கொள்வார்கள். ஹாய் ஹோ" என்று குறிப்பிட்டுள்ளார்.


'எமர்ஜென்சி' திரைப்படம் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் வாழ்க்கையைச் சுற்றி வருகிறது, இதில் மறைந்த அரசியல்வாதியான இந்திராவின் கதாப்பாத்திராத்தில்  கங்கனா நடித்து வருகிறார். அனுபம் கெர், மஹிமா சவுத்ரி மற்றும் ஸ்ரேயாஸ் தல்படே ஆகியோரும் படத்தின் ஒரு பகுதியாக உள்ளனர். சர்வேஷ் மேவாரா இயக்கிய 'தேஜாஸ்' படத்திலும் கங்கனா நடிக்கிறார், இப்படத்தில் ரணாவத் விமானப்படை விமானியாக நடிக்கிறார். மேலும் இப்படம் இந்திரா காந்தியின் முழு வாழ்க்கை வரலாறு இல்லை என்றும் எமர்ஜென்சி காலகட்டத்தில் நடந்த முக்கியமான ஒரு சில நிகழ்வுகளைக் அடிப்படையாகக் கொண்டது என்று கூறப்படுகிறது. படத்தின் ரீலீஸ் தேதி இன்னும் அதிகாரப்பூர்வமாக  அறிவிக்கப்படவில்லை.