பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் ட்விட்டர் 20 மாதங்களுக்கு பிறகு மீண்டுள்ளதால் மீண்டும் ட்விட்டரில் இணைந்துள்ளார். இதை ட்வீட் மூலம் தெரிவித்துள்ளார். 


மேற்கு வங்கத்தில் நடைபெற்ற தேர்தலுக்குப் பிறகு அதன் ரிசல்ட் குறித்து கங்கனா ரனாவத் வெளியிட்ட சர்ச்சைக்குரிய ட்வீட் காரணமாக அவரின் ட்விட்டர் கணக்கு மே 4, 2021 அன்று வெறுக்கத்தக்க நடத்தை மற்றும் தவறான நடத்தை தொடர்பாக ட்விட்டர் பாலிசியை மீண்டும் மீண்டும் மீறியதால் இடைநிறுத்தப்பட்டது. 



 


விதியை மீறியதால் முடக்கம்:


மேற்கு வங்கத்தில் பாஜக மீது மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெற்றது. தேர்தலுக்கு பிறகு ஏராளமான வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்றன. அந்த சமயத்தில் எரிச்சலூட்டும் ட்வீட்டுகளுக்கு பெயர் போனவர் கங்கனா ரனாவத். மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சிக்கு அழைப்பு விடுத்த அவர், வன்முறைக்கு பானர்ஜியை குற்றம் சாட்டினார். இதன் காரணமாக தான் நடிகை கங்கனா ரனாவத் ட்விட்டர் கணக்கு விதிகளை மீறியதால் இடைநிறுத்தப்பட்டது. 






 


மீண்ட ட்விட்டர் கணக்கு :


அந்த வகையில் தற்போது மீண்டும் நடிகை கங்கனா ரனாவத் ட்விட்டர் கணக்கு 20 மாதங்களுக்கு பிறகு மீட்டப்பட்டுள்ளதால் மீண்டும் திரும்பியுள்ளார். இந்த தகவலை ஒரே தனது ட்விட்டர் கணக்கு மூலம் பகிர்ந்துள்ளார். “அனைவருக்கும் வணக்கம், மீண்டும் இங்கு வந்ததில் மகிழ்ச்சி” என கங்கனா ட்வீட் செய்துள்ளார். அவர் ட்விட்டரில் ட்வீட் செய்த அடுத்த 10 நிமிடத்தில் ஆயிரங்கணக்கான லைக்ஸ்களை குவித்துள்ளது. 






'எமர்ஜென்சி' படப்பிடிப்பு முடிந்தது :


கங்கனா ரனாவத் எழுதி, தயாரித்து, இயக்கி, நடித்துள்ள 'எமர்ஜென்சி' திரைப்படத்தில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தான் நிறைவு பெற்றது. இதை தெரிவிக்கும் வகையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை போஸ்ட் செய்துள்ளார். மேலும் இப்படம் அக்டோபர் 20ம் திரையரங்கில் வெளியாகும் என அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது.