சினிமா நடிகர்கள் அவரவர்களின் பெயர்களுக்கு முன்னர் ஒரு பட்டத்தை வைத்துக்கொள்வது என்பது வழக்கமான ஒன்று. அந்த வகையில் புரட்சி  தலைவர் என மக்களால் கொண்டாடப்பட்டவர் எம்.ஜி.ஆர். அவரின் பட்டத்தை கொண்டு புரட்சி தளபதி என்ற பட்டத்துடன் அழைக்கப்படுபவர் நடிகர் விஷால்.



பச்சை குத்திக்கொண்ட விஷால் :


நடிகர் விஷால் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் தீவிரமான ரசிகர். அவரின் கொள்கைகளையும் பின்பற்ற கூடியவர். இன்றும் எம்.ஜி.ஆரை கடவுளாக நினைத்து வணங்குபவர்களும் உண்டு. கிராம பகுதிகளில் அவரின் உருவத்தை தனது இதயங்களிலும், கைகளிலும் பச்சை குத்தி கொள்வது வழக்கம். அந்த வழக்கத்தை தற்போது நடிகர் விஷால் பின்பற்றுகிறார்.  எம்.ஜி.ஆரின் உருவத்தை தனது மார்பில் பச்சை குத்தி கொண்டுள்ளார். இது அவர் அரசியலில் குதிக்கும் பின்னணியாக இருக்குமா என  நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.  






சொதப்பலான திட்டம் :


2017ம் ஆண்டே நடிகர் விஷால் அரசியலில் இறங்க முடிவெடுத்தார். ஆனால் அந்த சமயத்தில் அவருக்கு 8 பேர் மட்டுமே வேட்பு  மனுவை முன்மொழிந்ததால் அவரின் மனு நிராகரிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது எம்.ஜி.ஆர் உருவத்தை பச்சை குத்தியுள்ளதால் இது அரசியல் பிரவேசத்தின் முதற்கட்டமாக இருக்குமா என சந்தேகம் எழுந்துள்ளது. 






 


அடுத்தடுத்து எழும் கேள்விகள் :


அது மட்டுமின்றி அது உண்மையிலேயே பச்சை குத்தப்பட்டதா அல்லது  அடுத்த படத்திற்கான கெட்டப்பாக இது இருக்கலாமா என அடுத்தடுத்து யூகங்களை முன்வைத்து வருகிறார்கள் நெட்டிசன்கள். சமீபத்தில் விஷால் நடிப்பில் வெளியான 'லத்தி' திரைப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. படம் வெளியாகி ஒரு மாதம் கூட முடிவடையாத நிலையில் தொலைக்காட்சியில் பொங்கல் சிறப்பு திரைப்படமாக ஒளிபரப்பப்பட்டது.    


மார்க் ஆண்டனி:


அதனை தொடர்ந்து தற்போது நடிகர் விஷால் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் 'மார்க் ஆண்டனி' திரைப்படத்தில் நடித்து வருகிறார். நடிகர் விஷால் நடிக்கும் 33வது திரைப்படமான 'மார்க் ஆண்டனி' படத்தில் வில்லனாக இணைந்துள்ளார் நடிகர் எஸ்.ஜே. சூர்யா. இப்படத்தில் இருவருமே இரட்டை வேடத்தில் நடிக்கிறார்கள் என கூறப்படுகிறது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. ஏற்கனவே விஷால் நடிப்பில் வெளியான 'லத்தி' திரைப்படம் தோல்வியை சந்தித்ததால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. இப்படம் இந்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.