பிரம்மஸ்திரம் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில் நடிகை கங்கனா ரனாவத் படம் குறித்த தனது விமர்சனத்தை காட்டமாக முன்வைத்துள்ளார்.

Continues below advertisement

இது குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கும் கங்கனா,  “ கரண் ஜோஹர் போன்றவர்களின் நடந்தையை கேள்வி கேட்க வேண்டும். அவர் தனது படக்கதைகளை விட அடுத்தவரின் செக்ஸ் வாழ்கையை தெரிந்து கொள்வதில் அதிகம் ஆர்வம் காட்டுகிறார்.

அவரே படத்திற்கான விமர்சனங்கள், நட்சத்திரங்கள், போலியான வசூல் விபரங்கள் மற்றும் டிக்கெட்டுகளை என அனைத்தையும் வாங்கி விடுகிறார். இந்த முறை அவர் ஹிந்துயிசம் மற்றும் தென் பகுதி அலைகளின் மேல் ஏறி பயணம் செய்ய முயற்சி செய்கிறார்.” என்று குறிப்பிட்டு இருக்கிறார். 

Continues below advertisement

மேலும் தென் இந்திய கலைஞர்களை படத்தின் பிரோமோஷனுக்கு கரண் ஜோஹர் பயன்படுத்துவதையும் அவர் குற்றம் சாட்டியிருக்கும் அவர், “ திடீரென்று எல்லா பூசாரிகளும் படத்தை பிரோமோட் செய்ய தென்னிந்திய கலைஞர்களிடம் பிச்சை எடுக்கின்றனர்.” என்று குறிப்பிட்டுள்ளார். 

மேலும் அவர்கள் எல்லாவற்றையும் செய்வார்கள். ஆனால் நல்ல எழுத்தாளர், இயக்குநர், நடிகர்கள் மற்றும் பிற திறமையாளர்களை மட்டும் பணியமர்த்த மாட்டார்கள். படத்தின் படுதோல்வியை சரிசெய்ய அவர்களிடம் கெஞ்சி நின்றவர்களை ஏன் அவர்கள் பணியமர்த்திருக்க கூடாது.

தொடர்ந்து படத்தின் இயக்குநர் அயன் முகர்ஜியும் தாக்கியிருக்கும் அவர், “ அயன் முகர்ஜியை மேதை என்று சொன்ன அனைவரையும் ஜெயிலில் அடைக்க வேண்டும். இந்தப்படத்திற்கு அவர் 12 வருடங்கள் எடுத்துக்கொண்டிருப்பதாக சொல்லியிருக்கிறார். 14 ஒளிப்பதிவாளர்களை மாற்றியிருக்கிறார். 400 நாட்களுக்கு மேல் படத்தின்  படப்பிடிப்பில் 85 துணை இயக்குநர்களை மாற்றி 600 கோடிகளை நாசமாக்கியிருக்கிறார். 

பாகுபலி கொடுத்த வெற்றி காரணமாக  ‘ஜலாலுதீன் ரூமி' என்ற படத்தின் பெயரை கடைசி நேரத்தில் 'ஷிவா' என மாற்றி மத உணர்வுகளை சுரண்ட முயன்றுள்ளனர். இப்படிப்பட்ட சந்தர்ப்பவாதிகள், படைப்பாற்றல் இல்லாதவர்கள், பேராசை பிடித்தவர்களை மேதைகள் என்று அழைத்தால் அது ஏமாற்றுவது அல்ல.. திட்டமிடப்பட்ட பிழை.” என்று குறிப்பிட்டு இருக்கிறார். 

அயன் முகர்ஜி இயக்கத்தில் அமிதாப் பச்சன், ரன்பீர் கபூர், ஆலியா பட், நாகார்ஜுனா, மௌனி ராய் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள படம் “பிரம்மாஸ்திரா”. 3 பாகங்களாக உருவாகும் இப்படத்தின் முதல் பாகம் 2019 ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் கிராபிக்ஸ் பணிகள் முடிவடையாததால் 2020 ஆம் ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாகும் என கூறப்பட்டது. அப்போது கொரோனா ஊரடங்கு போடப்பட்டதால் கடைசியாக  செப்டம்பர் 9 ஆம் தேதியான நேற்று வெளியிடப்பட்டது. ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனம் மற்றும் கரண் ஜோஹர் இணைந்து அதிக பொருட்செலவில் இப்படத்தை தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.