சமந்தா - நாக சைதன்யா பிரிவிற்கு பாலிவுட் நடிகர் அமீர்கானே காரணம் என்று நடிகை கங்கனா ரனாவத் மறைமுகமாக குற்றம்சாட்டியுள்ளார். சைதன்யா பாலிவுட்டின் 'விவாகரத்து நிபுணர்' உடன் தொடர்பு கொண்ட சிறிது நேரத்திலேயே இந்த முறிவு ஏற்பட்டதாகவும் அவர் கூறினார்.
இதுதொடர்பாக கங்கனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "விவாகரத்து நடக்கும் போதெல்லாம், தவறு எப்போதும் ஆணின் மீது தான் இருக்கும். இது பழமைவாதமாகவோ அல்லது தீர்ப்பு ரீதியாகவோ தோன்றலாம். ஆனால் கடவுள் இப்படித்தான் ஆணையும் பெண்ணையும் இயல்பாகவும் இயக்கமாகவும் ஆக்கியிருக்கிறார். பெண்களை ஆடை போல மாற்றும் இவர்கள் தயவு காட்டுவதை நிறுத்திவிட்டு, பின்னர் அவர்களை தங்கள் சிறந்த நண்பர்கள் என்று கூறிக்கொள்கிறார்கள். நூற்றுக்கு ஒரு பெண் தவறாக இருக்கலாம். இவர்களை ஊக்குவிக்கும் ஊடகங்கள் மற்றும் ரசிகர்களுக்கு இது அவமானம். அவர்கள் அவர்களை வாழ்த்தி அந்த பெண்ணை குறை கூறுகிறார்கள். விவாகரத்து கலாச்சாரம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வளர்ந்து வருகிறது. திடீரென தனது மனைவியை விவாகரத்து செய்த தெற்கு நடிகர் 4 வருடங்கள் மற்றும் அவருடன் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக உறவில் இருந்தார். சமீபத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டாருடன் தொடர்பு கொண்டார். அவர் பாலிவுட் விவாகரத்து நிபுணர் என்றும் அழைக்கப்படுகிறார். பல பெண்கள் மற்றும் குழந்தைகளின் வாழ்க்கையை அழித்துவிட்டு, வாழ்கிறார்” என்று பதிவிட்டிருந்தார்.
அமீர்கான் முக்கிய வேடத்தில் நடிக்கும் 'லால் சிங் சத்தா’ படத்தின் மூலம் நாக சைதன்யா விரைவில் பாலிவுட்டில் அறிமுகமாகிறார். இதை குறிப்பிட்டே அமீர்கானை குறிவைத்து கங்கனா விமர்சித்துள்ளார்.
சமீபத்தில், அமீர்கான்,15 வருடங்களுக்குப் பிறகு கிரண் ராவை பிரிந்ததாக அறிவித்தார். அவர் முன்பு ரீனா தத்தாவை மணந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, சமந்தாவும், நாகசைதன்யாவும் விவாகரத்து செய்யவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதுதொடர்பாக சமந்தா மற்றும் நாகசைதன்யா ஆகியோர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளனர். எங்களது ரசிகர்கள், நலம் விரும்பிகள், ஊடகங்கள் ஆகியோர் இந்த கடினமான காலத்தில் எங்களுக்கு ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இதை கடந்து செல்வதற்க பிரைவசியை அனைவரும் வழங்க வேண்டும் என இருவரும் ஒரே பதிவை இட்டுள்ளனர்.