செங்கல்பட்டு மாவட்டம் புனித தோமையர்மலை ஒன்றியத்திற்கு உட்பட்ட பெரும்பாக்கம் ஊராட்சியில் நடைபெறயிருக்கும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடக் கூடிய அதிமுக மற்றும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பெரும்பாக்கத்தில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய தொண்டர்கள் மத்தியில் பேசிய அண்ணாமலை கூறுகையில், ”தற்போதுள்ள அரசியல் கர்மவீரர் காமராஜருடைய அரசியலுக்கு நேர் அரசியலாக நடந்து கொண்டிருப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்தார். அதற்கு உதரணமாக இரண்டாயிரம் போலீசார் பாதுகாப்புடன், 40 கார்கள் பின் தொடர, இரண்டு இலட்சம் ரூபாய் சைக்கிளில் பயணம் செய்யும் அரசியல் நடப்பதாகவும், பண பலம் படை பலம் கொண்ட திமுகவுக்கு, வாக்களிப்பதை மறக்க வேண்டும். மத்திய அரசின் திட்டங்கள் 80% பஞ்சாயத்து மூலமாக, உள்ளாட்சி பிரதிநிதிகள் மூலமாக வரக்கூடியதை முறையாக கொடுக்க தங்கள் அணியினரால் மட்டுமே முடியும் என பேசினார்.



அடுத்த 5 நாட்கள் என்பது திமுகவின் மேஜிக் அரசியல் செய்கின்ற நேரம், நோட்டை தூக்கிக்கொண்டு பொய் பிரசாரத்தை அவிழ்த்துவிட்டு மேஜிக் பிரசாரம் செய்வார்கள். அதனால் சாப்பாட்டை ஆக்க பொறுத்தவன், ஆற பொருக்க வேண்டும் என்ற பழமொழிக்கு ஏற்றவாறு,  நுணுக்கமான அரசியல் செய்து வேட்பாளர்களை பற்றிய புரிதலை மக்களிடையே ஏற்படுத்தி, வெற்றி வாகை சூட வழிவகை செய்யவேண்டும் என கேட்டுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில் ஏராளமான பாஜக மற்றும் அதிமுக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.



 

காஞ்சிபுரம் மாவட்டம் 

 

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத்  13வது வார்டு ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர மதியழகனை ஆதரித்து வாரணவாசி பகுதியில், அகில இந்திய மகளிர் அணி பொதுச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் தாமரை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்து பிரச்சாரம் செய்தார்.



அப்போது பேசிய  வானதி சீனிவாசன், வாரணவாசி பாஜக வேட்பாளர் மதியழகன் அவர்கள் அப்பகுதியில் உள்ள 800 குடும்பங்களுக்கு மத்திய அரசின் இலவச சிலிண்டர்களை பெற்றுத்தந்து உள்ளதாகவும், மேலும் இலவச மாடு வழங்கும் திட்டத்தில் ஏராளமான பயனாளிகளுக்கு மாடுகளைப் பெற்றுத் தந்ததாகவும், தற்போதைய ஜல் ஜீவன் திட்டம், மத்திய அரசின் தொழில் முனைவோர் கடன் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை முன்னின்று செய்து வருவதால், அவரை வெற்றி பெற வைத்து ஏழை எளிய மக்கள் வாழ்வில் ஒளி பெற வேண்டுமென தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.

 

பிரச்சாரம் முடிவதற்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களுடைய வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.