தக் லைஃப்


நாயகன் படத்திற்கு அடுத்தபடியாக சுமார் 33 ஆண்டுகளுக்குப் பிறகு கமல் மணிரத்னம் இணைந்துள்ள படம் தக் லைஃப். இப்படத்தில் த்ரிஷா , அபிராமி, துல்கர் சல்மான் , ஜெயம் ரவி , ஜோஜு ஜார்ஜ் , ஐஸ்வர்யா லெக்‌ஷ்மி உள்ளிட்டவர்கள் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இதனைத் தொடர்ந்து ஜெயம் ரவி மற்றும் துல்கர் சல்மான் இப்படத்தில் இருந்து விலகி சிம்பு நடிக்க இருபதாக தகவல் வெளியானது. ஏ.ஆர் ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைக்கிறார். மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது.


கமலின் மகனாக சிம்பு






இப்படத்தில் கமலின் மகனாக நடிகர் சிலம்பரசன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை உறுதிபடுத்தும் விதமாக கமல் மற்றும் சிம்புவின் படப்பிடிப்பு புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதனை அறிவிக்கும் விதமாக வரும் மே 8 ஆம் தேதி சிம்புவின் கதாபாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாக இருப்பதாக படக்குழு தகவல் வெளியிட்டுள்ளது