Akshara Hassan: மும்பையில் புது வீடு வாங்கி செட்டிலான கமல் மகள் அக்‌ஷரா.. இத்தனை கோடிகளா!

உலகநாயகன் கமல்ஹாசனின் மகளான நடிகை அக்‌ஷரா ஹாசன் மும்பையில் புதிய ஃபிளாட் ஒன்று வாங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.

Continues below advertisement

அக்‌ஷரா ஹாசன்

உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் அவரது முன்னாள் மனைவியான சாரிகா தாகூர் ஆகிய இருவருக்கும் பிறந்த மகள் அக்‌ஷரா ஹாசன். தனது தங்கை ஸ்ருதி ஹாசனைப் போல் சினிமாவுக்கு அறிமுகமாகாமல் இருந்து வந்த அக்‌ஷரா, கடைசியாக தனுஷ் நடிப்பில் வெளியான ஷமிதாப் படத்தில் கதாநாயகியாக நடித்தார்.

Continues below advertisement

இந்தப் படத்தில் அவரது நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து அஜித் குமார் நடிப்பில் வெளியான விவேகம் படத்தில் நடித்தார் அக்‌ஷரா. ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரித்து விக்ரம் நடித்து வெளியான ‘கடாரம் கொண்டான்’ படத்தில் நடித்தார். பல்வேறு  வாய்ப்புகள் வந்தும் சினிமாவுக்கும் தனக்கும் இடையில் ஒரு இடைவெளியை கடைபிடித்து வருகிறார்.

மும்பையில் புதிய வீடு

அவ்வப்போது தனது தந்தை கமல்ஹாசனுடம் இணையதளத்தில் புகைப்படங்களை பகிரும் நேரங்களைத் தவிர்த்து பெரும்பாலும் இணையவாசிகளின் கவனத்தை தவிர்த்து வரும் அக்‌ஷரா, தற்போது ஒட்டுமொத்த சமூக வலைதளங்களிலும் பேசுபொருளாக மாறியுள்ளார்.

இதற்கு காரணம் மும்பையில் அவர் வாங்கியிருப்பதாகக் கூறப்படும் புதிய வீடுதான். மும்பையில் 15 மாடி கட்டிடம் ஒன்றில் பதிமூன்றாவது மாடியில் ரூ.15.75 கோடிக்கு வீடு ஒன்றை அக்‌ஷரா ஹாசன் வாங்கியுள்ளதாக இணையதளத்தில் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. மொத்தம் 2,245 சதுர அடிகளைக் கொண்ட இந்த வீட்டில் 3 கார்கள் நிறுத்தும் வசதி இருப்பதாகக் கூறப்படுகிறது. பாந்த்ராவில் இருக்கும் இந்த வீட்டை ஒரு இளம் தம்பதியிடம் இருந்து அவர் வாங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. 

அக்னிச் சிறகுகள்

அக்‌ஷரா ஹாசன் நடிப்பில் கடைசியாக வெளியாக அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து தற்போது மூடர் கூடம் நவீன் இயக்கத்தில் அவர் நடித்துள்ள படம் அக்னிச் சிறகுகள்.

'அக்னிச் சிறகுகள்' மல்டி ஸ்டாரர் படத்தில் அருண் விஜய் மற்றும் விஜய் ஆண்டனி ஆகியோர் கதாநாயகர்களாக களமிறங்க, ஷாலினி பாண்டே மற்றும் அக்‌ஷரா ஹாசன்ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மேலும்,  பாலிவுட் நடிகை ரைமா சென் இந்தப் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகியுள்ளார்.

அக்னிச் சிறகுகள்' படத்தின் முதல் ஷெட்யூல் கொல்கத்தாவில் படமாக்கப்பட்டது. இரண்டாவது ஷெட்யூல் மாஸ்கோ மற்றும் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் நடந்தது. அதைத் தொடர்ந்து கஜகஸ்தானில் உள்ள அல்மாட்டியில் சில அதிரடி காட்சிகள் படமாக்கப்பட்டன.

கஜகஸ்தானில் படமாக்கப்பட்ட முதல் இந்தியத் திரைப்படம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் முடிவடைந்து கொரோனா நோய்த் தொற்று காரணத்தினால் ரிலீஸ் தாமதமானது. தற்போது வரை படம் வெளியாகாமல் நிலுவையில் இருந்து வருகிறது.

 

Continues below advertisement
Sponsored Links by Taboola