உலகநாயகன் கமல்ஹாசனின் பிறந்தநாளான இன்று சோசியல் மீடியா முழுவதிலும் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து கொண்டு இருக்கின்றன. பல பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்து தெரிவிக்கும் இந்த தருணத்தில் நடிகர் கமல்ஹாசன் தனது அண்ணன் சாருஹாசன் இல்லத்தில் அண்ணன் சாருஹாசன் மற்றும் அண்ணி கோமளம் அம்மாள் இருவரையும் நேரில் சென்று சந்தித்து வாழ்த்துக்களை பெற்றுள்ளார். 


 



 


வாழ்த்து பெற்ற உலகநாயகன் :


நடிகர் கமல்ஹாசன் தனது குடும்பத்தின் மீது மிகுந்த அன்பும் பாசமும் கொண்டவர். தனது வாழ்க்கை பயணத்தில் முக்கிய பங்கு வகித்த தனது அண்ணன் மட்டும் அண்ணி இருவர் மீதும் மிகுந்த அக்கறையும் மரியாதையும் கொண்ட நடிகர் கமல்ஹாசன் நேரில் சென்று வாழ்த்துக்களை பெற்றுக்கொண்டார். அந்த சமயத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டுள்ளன. இந்த தருணத்தில் நடிகை சுஹாசினி, இயக்குனர் மணிரத்னம் இருவரும் உடன் இருக்கிறார்கள். கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் இருவரும் இணைந்து இருக்கும் இந்த புகைப்படங்கள் மிகவும் வைரலாக பகிரப்பட்டு வருகின்றன. 


 






 


கமல் - மணிரத்னம் காம்போ :


68வது பிறந்தநாளை கொண்டாடும் ஆண்டவரின் அடுத்த ப்ராஜெக்ட் குறித்த புதிய அப்டேட் ஒன்று இன்று வெளியாகி அவரது ரசிகர்களை சந்தோஷப்படுத்தி உள்ளது. இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் 35 ஆண்டுகளுக்கு பிறகு நடிகர் கமல்ஹாசன் இணையவுள்ளார் என்பது தான் அந்த இனிய செய்தி. 


1987ம் ஆண்டு வெளியான "நாயகன்" திரைப்படத்திற்கு பிறகு இருவரும் இணைய பொருத்தமான சந்தர்ப்பங்கள் அமையவில்லை. இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு இந்த தருணம் தற்போது ஒன்று கூடியுள்ளது. மேலும் சிவா, ஆர். மகேந்திரன், மணிரத்னம் தயாரிக்கும் இப்படத்தை இணைந்து தயாரிக்கிறது உதயநிதி ஸ்டாலின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம். தற்காலிகமாக உலகநாயகன் #234 என பெயரிடப்பட்டுள்ள இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார் இசை புயல் ஏ.ஆர். ரஹ்மான்.


 






 


நடிகர் கமல்ஹாசன் ' இந்தியன் 2 ' படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார். இயக்குனர் மணிரத்னம் வேகமாக தயாராகி வரும் 'பொன்னியின் செல்வன் 2' படத்தில் பிஸியாக இருக்கிறார். எனவே இயக்குனர் - மணிரத்னம் - உலகநாயகன் கமல்ஹாசன் கூட்டணியில் உருவாக இருக்கும் திரைப்படம் 2024 ல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.