கமல்ஹாசனின் விக்ரம் படத்தின் இசை வெளியீட்டு விழா(Vikram Audio Launch) இன்று நடைபெற உள்ள நிலையில் பழைய விக்ரம் படத்தின் போஸ்டர்கள் வைரலாகி வருகிறது.


இந்திய திரையுலகின் முன்னணி நடிகர் கமல்ஹாசன். உலக நாயகனாக வலம் வரும் கமல்ஹாசன் 1986-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் விக்ரம். ராஜசேகர் இயக்கிய இந்த படத்தில் இளையராஜா இசையமைத்திருந்தார். இந்த படம் வெளியாகி சுமார் 36 ஆண்டுகளுக்கு பிறகு கமல்ஹாசன் மீண்டும் விக்ரம் என்ற புதிய படத்தில் நடித்துள்ளார்.


லோகேஷ் கனகராஜ் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா இன்று மாலை நடைபெறுகிறது. கமல்ஹாசனின் புதிய விக்ரம் படத்தின் ஒவ்வொரு அப்டேட்டின்போதும், அவரது பழைய விக்ரம் படம் தொடர்பான தகவல்களும் போட்டோக்களும் வைரலாகி வருகிறது.




இன்று மாலை விக்ரம் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ள நிலையில், தற்போது பழைய திரைப்படத்தின் ஆடியோ கேசட்டுகள், போஸ்டர்கள், பழைய விக்ரம் திரைப்படத்தின் நாயகியுடன் கமல்ஹாசன் சமீபத்தில் எடுத்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. தற்போது கமல்ஹாசன் நடித்துள்ள விக்ரம் படம் வரும் ஜூன் 3-ஆம் தேதி வெளியாக உள்ளது.


லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் ”பத்தல பத்தல” பாடல் வெளியாகி யூ-ட்யூப்பில் ட்ரெண்டாகி வருகிறது. விக்ரம் படத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து விஜய் சேதுபதி, ஃபஹத் பாசில் நடித்துள்ளனர். பழைய விக்ரம் படத்தில் கமல்ஹாசன் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். இந்த படத்திலும் கமல்ஹாசன் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.


கமல்ஹாசனின் விக்ரம் படத்தை உதயநிதி ஸ்டாலின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் விநியோகிக்க உள்ளது. கடந்த வாரம் வெளியாகிய பத்தல பத்தல பாடலில் மத்திய அரசை சாடி பல்வேறு கருத்துக்கள் உள்ளன. அந்த பாடலை கமல்ஹாசனே எழுதி, இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க : Shivangi Lover : என்னோட காதலன் இவரைப்போல இருக்கணும்.. ஷிவாங்கி கைகாட்டிய அந்த நடிகர்!!


மேலும் படிக்க : Director Perarasu: சொன்னதும் வந்த விஜய்! அஜித்துக்கு இன்ப அதிர்ச்சி! 'திருப்பதி’ பட பூஜையில் நடந்ததை பகிரும் பேரரசு!