ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அசோக் கெலாட் தலைமையிலான அரசு அங்கு ஆட்சி செய்து வருகிறது. முதல்வர் அசோக் கெலாட்டிற்கு மிகவும் நெருக்கமான அமைச்சர்களில் ஒருவர் மகேஷ் ஜோஷி. இவரது மகன் ரோகித் ஜோஷி. இவர் மீது கடந்த வாரம் இளம்பெண் ஒருவர் பாலியல் பலாத்கார குற்றம் சாட்டியிருந்தார். இதையடுத்து, இந்த விவகாரம் ராஜஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.




இளம்பெண் அளித்த பாலியல் புகாரின் அடிப்படையில் ஜெய்ப்பூரில் உள்ள மகேஷ் ஜோஷியின் இல்லத்திற்கு போலீசார் சென்றனர். அங்கு அவரது மகன் ரோகித் ஜோஷியை கைது செய்வதற்காக சென்றிருந்தனர். ஆனால், ரோகித் ஜோஷி அங்கு இல்லை. அவர் அங்கிருந்து தலைமறைவாகியிருந்தார்.


ரோகித் ஜோஷியை பிடிப்பதற்காக 15 முதல் 20 போலீஸ் அதிகாரிகள் அமைச்சரின் இல்லத்திற்கு சென்றிருந்தனர். ஆனால், அங்கு அவரது ஒரு வீடு இடிக்கப்பட்டிருந்தது. பின்னர், அங்கிருந்த அமைச்சரின் இன்னொரு வீட்டிற்கு போலீசார் விரைந்து சென்றனர். அங்கும் ரோகித் ஜோஷி இல்லை. இதையடுத்து, போலீசாருக்கு பயந்து அவர் தலைமறைவாகியது தெரியவந்தது.




அமைச்சர் மகன் மீது இளம்பெண் அளித்த புகாரில் கடந்தாண்டு ஜனவரி 8-ந் தேதி முதல் கடந்த ஏப்ரல் மாதம் 17-ந் தேதி வரை பல முறை ரோகித் ஜோஷி தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், அந்த பெண்ணுக்கு கருச்சிதைவு ஏற்பட்டதாகவும் பாதிக்கப்பட்ட இளம்பெண் கூறியுள்ளார். அமைச்சர் மகன் மீது போதைப்பொருள் பயன்படுத்தல், கிரிமினல் மிரட்டல், மானபங்கம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.  


ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் ஏற்கனவே முதல்வர் அசோக் கெலாட்டின் ஆதரவாளர்கள், சச்சின் பைலட்டின் ஆதரவாளர்கள் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. ஏற்கனே உள்கட்சி பூசல் நிலவி வரும் காங்கிரஸ் ஆட்சியில், தற்போது பாலியல் பலாத்கார வழக்கில் அமைச்சரின் மகன் தலைமறைவாகியிருப்பது அந்த கட்சியினருக்கும் இன்னும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. 


மேலும் படிக்க : Mumbai : தாவூத் இப்ராஹிமுடன் தொடர்பு? இருவரை அதிரடியாக கைது செய்த என்.ஐ.ஏ! நடந்தது என்ன?


மேலும் படிக்க : Congress: இதுதான் ப்ளான்! காய் நகர்த்தும் காங்! புதிய திட்டம்.. புதிய குழு; கூட்டத்தில் நடந்தது என்ன?


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண