ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் ரஜினி நடிக்க இருக்கும் தலைவர் 173 படத்தின் இயக்குநருக்கு தீவிர தேடுதலில் உள்ளார் கமல்ஹாசன். சுந்தர் சி இப்படத்தில் இருந்து விலகியபின் இப்படத்தை யார் இயக்கபோவது என்கிற எதிர்பார்த்து ரசிகர்களிடையே இருந்து வருகிறது. இப்படியான நிலையில் இயக்குநரை தேடி கடுப்பான் கமல் தானே இந்த படத்தை இயக்க முடிவு செய்திருப்பதாக தற்போது இணையத்தில் தகவல் வேகமாக பரவி வருகிறது 

Continues below advertisement

தலைவர் 173 இயக்குநர்

46 ஆண்டுகள் கழித்து தமிழ் சினிமாவில் இரு பெரும் நட்சத்திரங்களான ரஜினி கமல் இணைந்து பணியாற்ற இருக்கிறார்கள்.  அதன்படி ஜெயிலர் படத்தைத் தொடர்ந்து ரஜினியின் 173 ஆவது படத்தை  கமலின்  ராஜ்கமல் ஃபிலிம்ஸ்  தயாரிக்க ஒப்பந்தமானது. சுந்தர் சி இப்படத்திற்கு இயக்குநராக அறிவிக்கப்பட்டார். சுந்தர் சி சொன்ன கதையில் ரஜினிக்கு திருப்தி இல்லாததால் படத்தில் இருந்து சுந்தர் சி விலகினார் . ரஜினிக்கு கதை பிடித்தால் மட்டுமே தன்னால் இயக்குநரை முடிவு செய்ய முடியும் என கமல் திட்டவட்டமாக கூறியுள்ளார்.  தனுஷ் இப்படத்தை  இயக்கவிருப்பதாக அண்மையில்  தகவல்கள் வெளியாகின. ஆனால் இதுவும் உறுதியான தகவலாக இல்லை. ரஜினி படத்திற்கு இயக்குநரை தேடி சலித்துப்போன கமல் தானே இந்த படத்தை இயக்க முடிவு செய்துள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன

ரஜினியை இயக்கும் கமல் ?

நடிகராக மட்டுமில்லாமல் ஹே ராம் , விஸ்வரூபம் போன்ற தலைசிறந்த படங்களை இயக்கியுள்ளார் கமல்ஹாசன். இதுதவிர்த்து அவர் நடித்த பல சிறந்த படங்களுக்கு கதை , திரைக்கதை , இயக்கத்தில் பங்காற்றியிருக்கிறார். கமல் கடைசியாக 2018 ஆம் ஆண்டு விஸ்வரூபம் 2 படத்தை இயக்கினார். தற்போது 7 ஆண்டுகளுக்குப் பின் ரஜினியின் தலைவர் 173 படத்தை கமல் இயக்க முடிவு செய்திருப்பதாக தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. மற்ற தகவல்களைப் போல் இந்த தகவலும் அனுமானமாக இருப்பதற்கான சாத்தியங்களே அதிகம் என்றாலும் கமல் இயக்கத்தில் ரஜினியை திரையில் பார்ப்பதற்காக எதிர்பார்ப்பு அனைவருக்கும் இருக்கதான் செய்கிறது. 

Continues below advertisement

ஜெயிலர் 2

ரஜினி தற்போது நெல்சன் திலிப்குமார் இயக்கும் ஜெயிலர் 2 படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பில் உள்ளார். எஸ்.ஜே சூர்யா , ரம்யா கிருஷ்ணன் , யோகி பாபு , மிர்னா , சந்தானம் , மோகன்லால் , ஷிவராஜ்குமார் , மிதுன் சக்கரவர்த்தி , வித்யா பாலன் உள்ளிட்ட பல்வேறு நடிகர்கள் இந்த படத்தில் நடித்து வருகிறார்கள். அனிருத் இசையமைக்கிறார். சன் பிக்க்சர்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது.