ZEE5 அடுத்த அதிரடி படைப்பு, “ரேகை”  சீரிஸ் நவம்பர் 28-ல் ஸ்ட்ரீமாகிறது!! 


 புகழ்பெற்ற கிரைம் கதை எழுத்தாளர் ராஜேஷ் குமார் நாவலின் மையக்கதையிலிருந்து ஈர்க்கப்பட்ட இந்த தனித்துவமான தமிழ் சீரிஸை, தினகரன் M உருவாக்கி, எழுதி, இயக்கியுள்ளார். இந்த சீரிஸில், பாலஹாசன், பவித்ரா ஜனனி மற்றும் வினோதினி வைத்தியநாதன் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். ~

Continues below advertisement


இந்தியாவின் முன்னணி தேசீய ஓடிடித் தளமான ZEE5, தன் அடுத்த அதிரடி சீரிஸ் மூலம், உண்மை கண்முன்னே இருந்தும்,  நாம் கண்டுபிடிக்க முடியாத,  ஒரு இருண்ட உலகிற்குள் பயணிக்கும் வகையிலான, புதிய  அனுபவத்தைத் தரும் படைப்பை, ரசிகர்களுக்கு வழங்கவுள்ளது. ஒவ்வொரு தடயமும் மேலும் குழப்பத்திற்குள் இழுக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள, ஏழு எபிசோடுகள் கொண்ட கிரைம் திரில்லர் ‘ரேகை’ சீரிஸ் நவம்பர் 28 முதல் ஸ்ட்ரீமிங்காகிறது.


இந்த சீரிஸ், பிரபல எழுத்தாளர் ராஜேஷ் குமார் உருவாக்கிய குற்றக்கதை உலகின் கருவை எடுத்து கொண்டாலும், ‘ரேகை’ முழுமையாக தினகரன் M உருவாக்கி – எழுதி – இயக்கிய ஒரிஜினல் படைப்பாகும். ராஜேஷ் குமார் உலகின் கதைகளின் தளங்களில் ஆழமாகச் சென்று, சைக்கலாஜிகலாக ஒரு புதிய தீவிரத்தை அவர் இந்தக் கதைக்கு வழங்கியுள்ளார்.


உயிருடன் இருப்பவர்கள் மரணமடைந்ததாக பதிவு செய்யப்பட்டால், அதை எப்படி விசாரிப்பது?


S.I. வெற்றி (பாலஹாசன்) மற்றும் காவலர் சந்தியா (பவித்ரா ஜனனி) சாதாரணமாக விசாரிக்க துவங்கும் ஒரு குற்ற சம்பவம், விரைவில் மிக தீவிரமான விசாரணையாக மாறுகிறது.