தக் லைஃப்


 நாயகன் படத்தைத் தொடர்ந்து மணிரத்னம் மற்றும் கமல்ஹாசன் கூட்டணி 34 ஆண்டுகளுக்கு பிறகு தக் லைஃப் படத்திற்காக இணைந்துள்ளார்கள். மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது. த்ரிஷா , சிலம்பரசன் , அபிராமி , ஜோஜூ ஜார்ஜ், ஐஸ்வர்யா லக்‌ஷ்மி உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். கடந்த ஜனவரி மாதம் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்தன . முத்லில் ஜெயம் ரவி மற்றும் துல்கர் சல்மான் இப்படத்தில் நடிக்க இருந்த நிலையில் பின் இருவரும் படத்தில் இருந்து விலகினார்கள். இதனைத் தொடர்ந்து சிலம்பரசன் மற்றும் அசோக் செல்வன் படக்குழுவில் இணைந்தனர்.கடந்த சில மாதங்களாக சென்னையில் சிலம்பரசனின் காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில் தற்போது படப்பிடிப்பு முடிவுக்கு வந்துள்ளது.


படப்பிடிப்பு முடிந்தவுடன் படக்குழுவினர் அனைவரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைராலி வருகிறது.


150 கோடிக்கு ஓடிடி விற்பனை


தக் லைஃப் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் உரிமத்தை பிரபல ஓடிடி தளமான நெட்ஃப்ளிக்ஸ் வாங்கியிருக்கிறது. 149.7 கோடிக்கு இப்படத்தின் ஓடிடி உரிமம் விற்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் மூலம் ஓடிடி தளத்தில் அதிக விலைக்கு விற்கப்பட்ட தமிழ் படமாக தக் லைஃப் படம் சாதனை படைத்துள்ளது. 






முன்னதாக விஜய் நடித்த தி கோட் திரைப்படத்தின் ஓடிடி உரிமம் 110 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டது. சூர்யா நடித்துள்ள கங்குவா 100 கோடிக்கும் அஜித் நடித்து வரும் குட் பேட் அக்லி திரைப்படம் 95 கோடிக்கும் விற்பனையாகி உள்ளன. இப்படங்களின் சாதனையை முறியடித்து தற்போது தக் லைஃப் அதிக விலைக்கு விற்கப்பட்ட தமிழ் படங்களில் முதலிடம் பிடித்துள்ளது.




மேலும் படிக்க : Jayam Ravi : நானும் கெனிஷாவும் சேர்ந்து ஹீலிங் மையம் தொடங்குறோம்.. ஜெயம் ரவி பதில் என்ன? 


Fahadh Faasil : சம்பளமே இல்லாமல் நடிக்க தயார்..வேட்டையன் கதையை கேட்ட ஃபகத் ஃபாசில் ரியாக்‌ஷன்