`விக்ரம்’ திரைப்படம்

நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள `விக்ரம்’ திரைப்படம் பெரிய எதிர்பார்ப்புகளுடன் வெளியானதோடு, பாக்ஸ் ஆஃபிஸ் வசூலில் புதிய சாதனைகளை உருவாக்கி வருகிறது. மேலும், நடிகர் கமல்ஹாசனின் திரைப்பயணத்தில் இதுவரை இல்லாத அளவிலான முதல் நாள் வசூல் சாதனையையும் செய்திருக்கிறது `விக்ரம்’ திரைப்படம். இந்தப் படத்தின் விமர்சனங்களும் ஆதரவாக இருப்பதால், தமிழ்நாட்டில் அதிக வசூல் சாதனை நிகழ்ந்த வாரங்களுள் ஒன்றாக இந்த வாரத்தை `விக்ரம்’ மாற்றப் போகிறது என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் நேர்காணல் ஒன்றில், `விக்ரம்’ படத்திற்குப் பிறகு தான் நடிக்கும் திரைப்படம் குறித்து பேசியுள்ள நடிகர் கமல் ஹாசன், அதன் வெளியீடு வரும் ஜூலை மாதம் இருக்கும் எனத் தெரிவித்துள்ளார். 

Continues below advertisement

மலையாள இயக்குநர்..

பெயர் அறிவிக்கப்படாத இந்தத் திரைப்படத்தை மலையாள இயக்குநர் மகேஷ் நாராயணன் இயக்கவுள்ளார். `மாலிக்’ என்ற திரைப்படத்தின் மூலமாக நற்பெயரைப் பெற்றவர் மகேஷ் நாராயணன். இந்தப் படத்தின் திரைக்கதையை நடிகர் கமல்ஹாசனே மேற்பார்வையிடுகிறார் எனவும் கூறப்பட்டுள்ளது. `இயக்குநர் மகேஷ் நாராயணனுடன் ஒரு பணி இருக்கிறது. அவர் என்னிடம் ஒளிப்பதிவாளராகவும், படத்தொகுப்பாளராகவும் தனது திரைத்துறை கரியரைத் தொடங்கியவர். நாங்கள் இருவரும் எங்கள் தேவைகளைப் புரிந்துகொள்கிறோம்.. நான் எனக்காக திரைக்கதை ஒன்றை முடித்துள்ளேன். வரும் ஜூலை மாத இறுதியிலோ, ஆகஸ்ட் மாதத்தின் தொடக்கத்திலோ படத்தை வெளியிடலாம் எனத் திட்டமிட்டுள்ளோம்’ என நடிகர் கமல் ஹாசன் கூறியுள்ளார். 

Continues below advertisement

காமெடி திரைப்படம்...

தனது 60 ஆண்டுக் கால சினிமா பயணத்தில் பல்வேறு காமெடி திரைப்படங்களிலும், கதாபாத்திரங்களிலும் நடித்திருந்தாலும், கடந்த 10 ஆண்டுகளாக காமெடி திரைப்படங்களில் நடிகர் கமல் ஹாசன் நடிக்கவில்லை. எனவே விரைவில் காமெடி திரைப்படம் ஒன்றில் நடிக்கவுள்ளதாகத் தெரிவித்த நடிகர் கமல் ஹாசன், `தேசிய அளவில் இதுவரை நான் காமெடி திரைப்படத்தில் நடிக்கவில்லை எனினும், தமிழில் இதுவரை நான் நடித்த காமெடி படங்களில் எண்ணிக்கை பிற நடிகர்களை விட அதிகம்.. மக்களைச் சிந்திக்கத் தூண்டும் கதைக்களங்களில் நடிக்க வேண்டும். எனக்கு இப்போது காமெடி படம் நடிக்க வேண்டும் என்ற ஆசை உண்டு. ஆனால் காமெடி என்பது சீரியஸான விவகாரம் என்பதால் கவனமாக கையாள வேண்டும்’ எனக் கூறியுள்ளார். 

`சபாஷ் நாயுடு’ திரைப்படத்தின் பணிகளை மீண்டும் தொடங்குவதாகவும் நடிகர் கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண