இந்தியாவில் வலுவான எதிர்க்கட்சி அமைய விரும்புவதாகவும், அது நடைபெறாமல் இருப்பதற்கு வாரிசு அரசியல்தான் காரணம் என்று உத்ரபிரேசத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கருத்து தெரிவித்துள்ளார்.
உத்ரபிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள பரனுக் கிராமம் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் சொந்த கிராமமாகும். இந்த கிராமத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசுகையி, வாரிசு அரசியல் குறித்து கடுமையான விமர்சனம் செய்துள்ளார்.
நிகழ்ச்சியில் மோடி பேசியதாவது:
”இந்திய நாட்டில் ஜனநாயாகம வலுவாக இருக்க வேண்டும் என்றால், அரசியல் கட்சிகள் வாரிசு அரசியலை ஒடுக்க வேண்டும். திறமையான இளைஞர்களுக்கு வாய்ப்பளித்து, கட்சியில் அவர்களுக்கு உயர்பதவிகளை வழங்க வேண்டும். ஆனால், இவற்றிற்கு தடையாக இருப்பது வாரிசு அரசியல்தான். நான் எந்தயொரு அரசியல் கட்சியையும் குறிப்பிட்டு சொல்லவில்லை. என் கருத்துக்களை யாரும் தவறாக புரிந்துகொள்ள வேண்டாம். எனக்கு இதில் தனிப்பட்ட ஆதாயம் ஏதுமில்லை. ஆனால், வாரிசு அரசியல் ஜனநாயகத்திற்கு எதிரானது. வாரிசு அரசியல் சாதாரணமானவர்களை உயர்பதவிகளுக்கு வருவதை தடுக்கிறது.
நான் குஜராத்தில் உள்ள ஒரு சிறய கிராமத்தில் பிறந்தேன். அந்தக் கிராமமும் அதன் கலாச்சாரமும் எனக்கு வலிமை கொடுத்தது.” என்று பேசினார்.
இந்தியாவில் பா.ஜ.கவிற்கு எதிராக வலிமையான கூட்டணி அமைக்க விரும்புபவர்கள் வாரிசு அரசியலை ஒழித்தால்தான் அது சாத்தியமாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்