Bigg Boss Tamil Wild Card Entry: பிக்பாஸ் வீட்டில் வைல்டு கார்டு என்ட்ரியாக நுழையும் ஐந்து பேர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 7 கடந்த ஒன்றாம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், பிரதீப் ஆண்டனி, பவா செல்லதுரை, நிகசன், விஜய் வர்மா, விசித்ரா, பூர்ணிமா, விஷ்ணு, அக்ஷயா, வினுஷா, அனன்யா, கூல் சுரேஷ், ஜோவிகா, மணிசந்திரா, ரவீணா, ஐஷூ, மாயா, சவண விக்ரம், யுகேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதில் முதல் மூன்று வார எலிமினேஷனில் அனன்யா, பவா செல்லதுரை மற்றும் விஜய் வர்மா வெளியேறியுள்ளனர். ஒவ்வொரு நாளும் போட்டியாளர்களுக்கு இடையே சண்டைகளும் சர்ச்சைகளும், கருத்து முரண்பாடுகள் இருந்து வருவதுடன், புது புது டாஸ்க் கொடுத்து பார்வையாளர்களுக்கு சுவாரஸ்யத்தைக் கொடுத்து வருகிறது பிக்பாஸ் நிகழ்ச்சி. இதற்கிடையே போட்டியில் மேலும் சில மாற்றங்களைக் கொண்டு வர, போட்டியாளர்களுக்கு நெருக்கடி கொடுக்க வெளியில் இருந்து வைல்டு கார்டு என்ட்ரியாக பிக்பாஸ் வீட்டிற்குள் சிலர் அனுப்பப்படுவார்கள்.
இதற்கு முன்னதாக நடந்த ஆறு சீசன்களிலும் ஒருவர் அல்லது இருவர் மட்டுமே வைல்டு கார்டு என்ட்ரியாக பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றனர். ஆனால் இந்த முறை இரண்டு வீடு, போட்டிகளில் மாற்றம், புதிய கட்டுப்பாடுகள் என மாற்றம் இருப்பதால் வைல்டு கார்டு என்ட்ரியிலும் மாற்றம் உள்ளது. இந்த சீசனில் ஐந்து பேர் வைல்டு கார்டு என்ட்ரியாக பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைவார்கள் என கமல்ஹாசன் அறிவித்திருந்தார். அதற்கான ப்ரோமோவும் வெளியாகி ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டியது.
இந்த சூழலில் பிக்பாஸ் வீட்டில் நுழைய உள்ள அந்த ஐந்து பேர் யார் என்ற கேள்வி எழுந்த நிலையில், நிகழ்ச்சி தொகுப்பாளர் அர்ச்சனா, கானா பாலா, பட்டிமன்ற பேச்சாளர் அன்ன பாரதி, ரச்சிதா கணவர் தினேஷ் மற்றும் ஆர்.ஜே பிராவோ உள்ளிட்டோர் பிக்பாஸ் வீட்டில் வைல்டு கார்டு என்ட்ரியாக செல்ல உள்ளதாகக் கூறப்படுகிறது. இவர்கள் தான் அந்த ஐந்து வைல்டு கார்டு என்ட்ரி போட்டியாளர்கள் என சின்னத்திரை வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் படிக்க: Leo OTT Release: லீவுலாம் முடிஞ்சது.. இவ்வளவு சீக்கிரமா ஓடிடிக்கு வரும் விஜய்யின் ‘லியோ’... இதுதான் தேதி!