நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பில் நடிகர் உதயநிதி நடிக்க இருக்கிறார்.

  


இது குறித்து தனது ட்விட்ட்ர் பக்கத்தில் குறிப்பிட்டு இருக்கும் கமல், “ அன்றைய சரித்திரம், மீண்டும் அதை நினைவுறுத்துவோம்! தம்பி உதயநிதி ஸ்டாலின் அவர்களை  வாழ்த்தி வரவேற்கிறேன்” என்று பதிவிட்டு இருக்கிறார். 


 






ரெட் ஜெயிண்ட் நிறுவனத்தின் நிறுவனரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின், தனது நிறுவனத்தின் மூலம் படங்களை தயாரித்தும், பிற படங்களை வாங்கி விநியோகித்தும் வந்தார். தொடர்ந்து நடிப்பில் களமிறங்கிய அவர் இயக்குநர் ராஜேஷ் இயக்கத்தில் வெளியான  ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்தில் நடிகராகவும் அறிமுகமானார்.


அந்தப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தொடர்ந்து  ‘இது கதிர்வேலன் காதல்’  ‘நண்பேண்டா’ ‘ மனிதன்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். இறுதியாக இவர் நடிப்பில் வெளியான  ‘சைக்கோ’  ‘நெஞ்சுக்கு நீதி’ ஆகிய இரு படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு முன்னணி நடிகர்கள் நடித்த படங்கள் தொடங்கி பல படங்களை உதயின் ரெட் ஜெயிண்ட் நிறுவனம் வாங்கி வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் அண்மையில் தமிழத்தில் இவர் வெளியிட்ட விக்ரம் படம் உலக அளவில் 400  கோடிக்கும் மேல் வசூல் செய்தது. 


ரெட் ஜெயிண்ட் நிறுவனம் தொடங்கி 15 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், அதனைக்கொண்டாடும் விதமாக சென்னையில் நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் மற்றும் அமீர்கான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


 






இந்த  நிகழ்ச்சியில் கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிப்பில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படம் குறித்தான அறிவிப்பு வெளியிடப்பட்டது. ராஜ்கமல் நிறுவனத்தின் 54 ஆவது படமான இதன் இயக்குநர் யார் என்பது குறித்தான விவரம் இன்னும் வெளியிடப்படவில்லை.