Bank Holidays in August 2022 : ஆகஸ்ட் மாதம் 13 நாட்கள் வங்கிகள் இயங்காது - எந்தெந்த நாட்கள் என்று தெரிந்து கொள்ளுங்கள்
ஜூலை மாத இறுதியை நெருங்கி கொண்டு இருக்கிறோம். இந்த சமயத்தில் ஆகஸ்ட் மாதம் 2022ல் இருக்க போகும் அரசு விடுமுறை நாட்களை பற்றி நாம் தெரிந்து கொள்வது அவசியம். 2022ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் மொத்தம் 13 நாட்கள் அரசு விடுமுறை நாட்கள் என்பதால் வங்கிகள் செயல்படாது. சுதந்திர தினம் ரக்ஷா பந்தன் ஜன்மாஷ்டமி போன்ற தேசிய விழாக்கள் மற்றும் மதம் சார்ந்த விழாக்களும் இந்த ஆகஸ்ட் மாதத்தில் வருவதால் இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) அந்த நாட்களை சிறப்பு அனுசரிப்பு நாட்கள் என்ற காரணத்தால் வங்கிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளது.
வங்கிகள் விடுமுறை நாட்களை மக்காள் தெரிந்து கொள்வதற்காக விடுமுறை நாட்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. ஆகஸ்டில் இரண்டாவது சனிக்கிழமை ஞாயிற்றுக்கிழமை மற்றும் நான்காவது சனிக்கிழமை ஞாயிற்றுக்கிழமை தவிர மொத்தம் 13 நாட்கள் நாட்டின் உள்ள பல இடங்களில் வங்கிகள் செயல்படாது என்பதை தெரிவித்துள்ளது. மக்கள் அவதியுறாமல் இருப்பதற்காக வங்கிகள் செயல்படும் நாட்களை முன்கூட்டியே தெரிந்து கொள்வதற்காக இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இருப்பினும் ஆன்லைன் நிதி சேவைகள் வழக்கம் போல செயல் படும் என்பதால் எந்த ஒரு பாதிப்பும் இருக்காது அதனால் வாடிக்கையாளர்கள் கவலை பட தேவையில்லை.
ஆகஸ்ட் மாதத்தின் வங்கி விடுமுறை நாட்களின் பட்டியல் பின்வருமாறு:
ஆகஸ்ட் 1: திருகப ட்ஷே-ஜி Drukpa Tshe-zi festival ) பண்டிகை. சிக்கிம் நாட்டில் இது கொண்டாடப்படுவதால் அங்கு ஆகஸ்ட் 1ம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 8ம் தேதி முஹர்ரம் பண்டிகை. ஜம்மு காஷ்மீர் மற்றும் ஸ்ரீநகரில் மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 9ம் தேதி முஹர்ரம். அன்று அகர்தலா, அகமதாபாத், ஐஸ்வால், பேலாப்பூர், பெங்களூரு, போபால், சென்னை, ஹைதராபாத், ஜெய்ப்பூர், கான்பூர், கொல்கத்தா, லக்னோ, மும்பை, நாக்பூர், புது தில்லி, பாட்னா, ராய்ப்பூர் மற்றும் ராஞ்சியில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 11ம் தேதி மற்றும் 12 ம் தேதி ரக்ஷா பந்தன்.
ஆகஸ்ட் 13ம் தேதி தேசபக்தர்கள் தினம். அன்று இம்பாலில் மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினம். நாடு முழுவதும் அன்று வங்கிகளுக்கு விடுமுறை.
ஆகஸ்ட் 16 ம் தேதி பார்சி புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. அன்று பேலாபூர், மும்பை மற்றும் நாக்பூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 18 ம் தேதி ஜென்மாஷ்டமி.
ஆகஸ்ட் 20 ம் தேதி கிருஷ்ண அஷ்டமி. அன்று ஐதராபாத்தில் மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 29 ம் தேதி ஸ்ரீமந்த சங்கரதேவரின் திதி. அன்று குவஹாத்தியில் மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 31ம் தேதி விநாயகர் சதுர்த்தி. அன்று அகமதாபாத், பேலாப்பூர், பெங்களூரு, புவனேஸ்வர், சென்னை, ஹைதராபாத், மும்பை, நாக்பூர் மற்றும் பனாஜியில் அன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்த விடுமுறை அறிவிப்பு பட்டியல் உங்களின் விடுமுறைகளை முறையாக திட்டமிட ஏதுவாக இருக்கும் அதனால் இந்த பட்டியலை ஒரு முறை பார்த்து விட்டு பிறகு உங்களின் திட்டமிடுவதை மேற்கொள்வதன் மூலம் இடையூறுகளை தவிர்க்க இயலும்.