உலக நாயகன் என திரையுலகாலும், சினிமா ரசிகர்களாலும் அழைக்கப்படுபவர் கமல்ஹாசன். விவரம் தெரிந்தது முதலே கேமரா முன்பு நடிக்கத் தொடங்கிய கமலின் நடிப்பு பயணம் இன்றும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. வித விதமான கெட்டப்புகள், பாடகர், இயக்குநர் என கமல் தொடாத பகுதி சினிமாவில் இல்லை என்று கூட சொல்லலாம். சூப்பர் ஸ்டார் என ரஜினியை திரையுலகம் புகழ்ந்தாலும், தான் பார்த்து ரசித்த நடிகர் கமல் என அந்த சூப்பர்ஸ்டாரே பலமுறை பல இடங்களில் பதிவு செய்துள்ளார்.  கமலின் நடிப்பை பார்த்தால் தனக்கு பொறாமையாக இருக்குமெனவும் அவர் பலமுறை குறிப்பிட்டுள்ளார். சினிமாவில் வெற்றிக்கொடி நாட்டிய இந்த ஆழ்வார்பேட்டை ஆண்டவர் அந்த இடத்தோடு நின்றுவிடவில்லை. இந்திய சினிமாவில் பெரிய ஆளுமை என்றாலும் சின்னத்திரையிலும் கால் பதித்தார் கமல். 


உலகத்தை ஆளப்போறான்... என்ன மனுஷன்டா.. என்னய்யா பண்ணியிருக்கீங்க... மாதவன் புகழ்ந்து தள்ளிய சூப்பர்ஸ்டார்


சின்னத்திரைக்கு கமலா?என ஆச்சரியப்பட்டு முடிப்பதற்குள் துபுஜுகு, துபுஜுகு பிக் பாஸ் என வீட்டு டிவியை தட்டினார் கமல்.  பிக் பாஸ் மூலம் கமல்ஹாசனின் சின்னத்திரை பிரவேசமும் வெற்றிவாகை சூடியது. ஒன்று, இரண்டு என தற்போது பிக்பாஸ் 5வது சீசனில் பயணித்துக்கொண்டு இருக்கிறது. சினிமா, சின்னத்திரை என பயணம் என்றாலும் மறுபக்கம் அரசியலிலும் குதித்தார் கமல்ஹாசன். பேசிக்கொண்டிருக்க இது நேரமல்ல என படாரென அரசியல் பிரவேசம் எடுத்தார். கட்சிப்பெயர், கூட்டம், கொடி என பரபரவென தொடங்கிய மக்கள் நீதிமய்யம் கடந்த சட்ட மன்றத் தேர்தலையும் சந்தித்தது. தேர்தலில் கவனிக்க வைத்தாலும் வெற்றி என்பதை தொடவில்லை மநீம. 






வெற்றியின் மிக அருகில் சென்ற கமல்ஹாசன் அதனை தொடமுடியாமல் தோற்றுப்போனார். ஆனாலும் அவரது தோல்வியும் குறிப்பிட்டு பேசப்பட்டது. அதன் பின்னர் கட்சியில் சிலரின் பிரிவுகள், பிளவுகள் என இருந்தாலும் ஊரக உள்ளாட்சித் தேர்தலிலும் மநீம போட்டியிட்டது. இந்த நிலையில்தான் தற்போது புதுப்பயணத்தை தொடங்க இருக்கிறார் கமல்ஹாசன். அமெரிக்காவின் சிகோகாவில் கதர் தொடர்பான தொழிலை தொடங்க இருக்கிறாராம் கமல்ஹாசன். இது தொடர்பாக அவர் பதிவிட்ட ட்வீட்டில், தறி கெட விடமாட்டோம். நன்னூல் காப்போம் என குறிப்பிட்டுள்ளார். அது தொடர்பாக அவர் பதிவிட்டுள்ள போட்டோவில்  காந்தியின் இளம் வயது புகைப்படத்துடன் கூடிய Fashion is being civil  yet disobedient வாசகமும் இடம் பெற்றுள்ளது.


சினிமா, சின்னத்திரை, அரசியல் என தன்னுடைய கால் தடத்தை பதித்த கமல்ஹாசன் அடுத்து பிஸினெஸ்மேன் என்ற உலகத்துக்குள் நுழைய இருக்கிறார். இதிலும் கமல் சாதிப்பார் என அவரக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர் அவரது ரசிகர்கள்.


மெதுவா போனா பரவால்ல.. நல்ல வழியா இருக்கணும்.. ரேஷ்மா சொன்னது என்ன? தெறிக்கும் கமெண்ட்ஸ்..