நடிகை ரேஷ்மா சமீபத்தில் எடுத்துக்கொண்ட கவர்ச்சிகரமான புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்ட சில மணிநேரங்களிலேயே வைரலாகி வருகிறது. மேலும் நெட்டிசன்கள் இதற்கு கமெண்ட்களைத் தெறிக்கவிடுகின்றனர்.


தமிழ் திரைப்படத்தில் வந்த  “புஷ்பா புருஷன்“ என்ற வார்த்தையைக்கேட்டாலே அந்த படத்தில் வரும் அனைத்துக்காட்சிகளும் கண்முன்னே வந்து நிற்கும். அந்த அளவிற்கு வேலைன்னு வந்துட்டா வேலைக்காரன் என்ற திரைப்படத்தில் சூரிக்கு ஜோடியாக நடித்து கலக்கி இருப்பார் நடிகை ரேஷ்மா. முன்னதாக வாணி ராணி, வம்சம் போன்ற சீரியல்களில் நடித்திருந்தாலும் வேலைன்னு வந்துட்டா வேலைக்காரன் படத்தின் மூலம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப்பெற்றவர் தான் ரேஷ்மா. இதனையடுத்து இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.  இப்படத்தின் மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமான ரேஷ்மாவிற்கு தன் சினிமா வாழ்க்கையில் அடுத்த படி நிலையாக பிக்பாஸில் நுழைய வாய்ப்பு கிடைத்தது.



விஜய் தொலைக்காட்சியின் பிக்பாஸ் சீசன் 3 ல் கலந்துக்கொண்டார் ரேஷ்மா. இதன் மூலம் தனக்கென்று ஒரு அங்கீகாரத்தைப் பெற்றுக்கொண்ட ரேஷ்மாவிற்கு சன்டிவி சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்நிலையில் தான் விஜய் டிவியின் பாக்கியலெட்சுமி சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்த நிலையில் சன்டிவி சீரியலில் இருந்து விலகினார். தற்போது  மேலும், ராஜேஷ் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்த வணக்கம்டா மாப்ள படத்தில் யோகா டீச்சராக நடித்து கலக்கியிருந்தார் ரேஷ்மா. இப்படி சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை என இரண்டிலும் தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தி வரும் ரேஷ்மா, ஷூட்டிங்கின்போது அணியும் அனைத்து ஆடைகளிலும் கவர்ச்சிக்கரமான போட்டாக்கள் மற்றும் வீடியோக்களை எடுத்து அதனை தன்னுடைய இன்ஸ்டகிராமில் பதிவிட்டுவருவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.


 






இந்நிலையில் தான் தற்போது பிங்க் நிற புடவைக் கட்டியதோடு, பல கவர்ச்சிகரமான புகைப்படங்களை எடுத்து அதனை தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார் ரேஷ்மா பசுப்புலேட்டி. மேலும் அந்த புகைப்படத்தோடு, ”தவறான வழியில் வேகமாக ஓடுறத விட, சரியான வழியில மெதுவா நடந்தாலும் தப்பு இல்லை” என்ற மெசேஜ்ஜையும் பதிவிட்டுள்ளார். 


இதனைப்பார்த்த நெட்டிசன்கள், உங்களது புகைப்படத்திற்கும், மெசேஜ்ஜிற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை எனவும், ரெம்ப செக்ஸியா இருக்கு, உங்க ரசிகர்கள மகிழ்ச்சியில் வைத்திருக்க அவ்வப்போது இப்படி  போட்டாஸ் போடுங்க அக்கா என்பது போன்ற பல்வேறு கமெண்ட்ஸ்களையும் இன்ஸ்டாவில் பதிவிட்டுவருகின்றனர். மேலும் எப்போதும் புடவை அணிந்து போட்டாசூட் நடத்தி இருந்தாலும் தற்போது பதிவிட்டுள்ள இந்த புகைப்படங்கள் படு கிளாமராக உள்ளது என ரசிகர்கள் கமெண்ட்களை தெறிக்கவிட்டு வருகின்றனர். இதில் அநாகரீக கமெண்ட்ஸும் அடக்கம்.