Kamal Hassan: அடுத்தது ‘இந்தியன் 2’ இல்லை .. ஜூனில் ரிலீசாகும் கமலின் படம்.. இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் அடுத்ததாக இந்தியன் 2 படம் வெளியாகும் என ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில் இன்ப அதிர்ச்சி அளிக்கும் விதமாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. 

Continues below advertisement

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் அடுத்ததாக இந்தியன் 2 படம் வெளியாகும் என ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில் இன்ப அதிர்ச்சி அளிக்கும் விதமாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. 

Continues below advertisement

உலகநாயகன் கமல்ஹாசன் 

தமிழ் சினிமா மட்டுமல்ல இந்திய சினிமாவுக்கும் நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர்,பாடகர், பாடலாசிரியர் என பன்முக திறமை கொண்ட கமல்ஹாசனை பற்றி சொல்லி தெரிய வேண்டியதில்லை. சினிமாவில் புதிய புதிய முயற்சிகளை தன் படங்களை பரிசோதித்து பார்க்கும் கமல்ஹாசன் சினிமாவுக்கு கிடைத்த பொக்கிஷம் என்றே சொல்லலாம். கிட்டதட்ட 60 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் நடித்து வரும் அவர் காலத்துக்கு ஏற்றவாறு தன்னை மெருகேற்றிக் கொண்டு பிற நடிகர்களுக்கும் டஃப் கொடுத்து தான் கொண்டிருக்கிறார். இப்படியான நிலையில் கடந்தாண்டு கமல் நடிப்பில் விக்ரம் படம் வெளியாகி வசூல் சாதனைப் படைத்தது. 

வேட்டையாடு விளையாடு 

இதனைத் தொடர்ந்து அவர் நடிப்பில் இந்தியன் 2, மணிரத்னம் இயக்கத்தில் ஒரு படம் என லிஸ்ட் நீண்டுக் கொண்டே செல்கிறது. இந்த நிலையில் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் விதமாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது 2006 ஆம் ஆண்டு கமல்ஹாசன்  நடிப்பில் வெளியான ‘வேட்டையாடு விளையாடு’ படம் மீண்டும் ரீ- ரிலீஸ் செய்யப்படுகிறது. 

செவன்த் சேனல் கம்யூனிகேஷன் சார்பில் மாணிக்கம் நாராயணன் தயாரித்த இப்படத்தை கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கியிருந்தார். இந்த படத்தில் கமாலினி முகர்ஜி, ஜோதிகா, பிரகாஷ்ராஜ், டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். ஹாரிஸ் ஜெயராஜ் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். இப்படம் வெளியான காலக்கட்டத்தில் படையப்பா பட வசூலை முறியடித்து சாதனை படைத்தது.

ALSO READ | Sarath Babu Death: பெரும் சோகம்.. பிரபல நடிகர் சரத்பாபு காலமானார்..! கண்ணீரில் ரசிகர்கள்..!

ரி ரிலீஸ்:

தொடர்ச்சியாக பெண்கள் கொலை செய்யப்படுவதும், அதனை காவல்துறை அதிகாரியான கமல்ஹாசன் தன் பாணியில் கண்டுபிடிப்பதுமே இப்படத்தின் கதையாக அமைக்கப்பட்டிருந்தது. பாடல்களும் பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தது. இந்த நிலையில் வேட்டையாடு விளையாடு படம் டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு மீண்டும்  ரீ - ரிலீஸ் செய்யப்படுகிறது.

மேலும் இப்படம் ஜூன் மாதத்தில் வெளியாகவுள்ளது. முன்னதாக கமலின் ‘ஆளவந்தான்’ படம் ரீ-எடிட் செய்யப்பட்டு விரைவில் வெளியாகும் என அதன் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தெரிவித்திருந்தார். அதேபோல் வேட்டையாடு விளையாடு படத்தின் 2 ஆம் பாகத்தை எடுக்க விருப்பப்பட்ட கௌதம் மேனன் கமல்ஹாசனுடன் ஆலோசனையில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க: STR 48: லண்டனில் ஒர்க் அவுட்.. வேற மாதிரி தயாராகும் சிம்பு.. கமல் தயாரிக்கும் படத்தின் லேட்டஸ்ட் தகவல்கள் இதோ...!

Continues below advertisement
Sponsored Links by Taboola