Manjummel Boys: மஞ்சுமெல் பாய்ஸ் படக்குழுவினரை நேரில் அழைத்த உலக நாயகன் கமல்ஹாசன் பாராட்டி, அவர்களுடம் புகைப்படமும் எடுத்துக் கொண்டார். 


மஞ்சுமெல் பாய்ஸ்


மலையாளத்தில் வெளியாகியுள்ள மஞ்சுமெல் பாய்ஸ் படம் சக்கைப்போடு போட்டு வருகிறது. மலையாள சினிமா மட்டும் இல்லாமல் தமிழ் சினிமா வட்டாரத்திலும் இந்தப் படம் குறித்துதான் பேச்சுகள் இருந்த வண்ணம் உள்ளன. சிதம்பரம் எஸ் பொதுவால் இயக்கத்தில் உருவான மஞ்சுமெல் பாய் மலையாள மொழியில் கடந்த பிப்ரவரி 22ஆம் தேதி வெளியானது.


2006 ஆம் ஆண்டு கொடைக்கானலில் உள்ள குணா குகையில் நடந்த உண்மையான சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. செளபின் சாஹிர், ஸ்ரீநாத் பாஸி , மரியம் ஜார்ஜ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்தப் படத்தில் கமல்ஹாசனின் குணா படமும், அதில் இடம்பெற்ற கண்மணி அன்போடு பாடலும் மிகச்சிறப்பான முறையில் பயன்படுத்தப்பட்டுள்ளது.


மஞ்சுமெல் பாய்ஸ் படம்  நான்கு நாட்களில் ரூ.14.75 கோடி வசூல் செய்துள்ளது.  இப்படத்தின் மொத்த பட்ஜெட் 5 கோடி என்ற நிலையில் படம் வசூலை அள்ளியது.  இந்தப் படத்தின் நிகழ்விடமாக உள்ள குணா படத்தில் வரும் குகைதான் உள்ளது.  குறிப்பாக படத்தின் க்ளைமக்ஸில் வரும் கண்மணி அன்போடு காதலன் பாடல் ரசிகர்களை தியேட்டரில் இருந்து நகரவிடவில்லை என்றே குறிப்பிட வேண்டும்.


”காதல் என்பது நண்பர்களுக்கும் பொருந்தும்”


அந்த அளவிற்கு படத்தின் கதையோடும் குணா குகையுடனும் ரசிகர்கள் ஐக்கியமாகிவிட்டனர் எனலாம். குணா குகை கொடைக்கானலில் அமைந்திருந்தாலும், உலக நாயகன் கமல்ஹாசனின் படத்திற்குப் பின்னர்தான் இந்த இடத்திற்கான அடையாளம் குணா குகை என அழைக்கப்பட்டது. இன்று வரை அந்த இடம் குணா குகை என்றே அழைக்கப்பட்டு வருகின்றது. 


இந்நிலையில் மஞ்சுமெல் பாய்ஸ் படக்குழுவினரை நேரில் அழைத்த உலக நாயகன் கமல்ஹாசன் பாராட்டியுள்ளார். மேலும், மஞ்சுமெல் பாய்ஸ் பட குழுவுடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டார். இது தொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.   அந்த வீடியோவில், கமல்ஹாசன், மஞ்சுமெல் பாய்ஸ் உடன் கலகலப்பாக பேசுகிறார். 






மேலும், "எனக்கு இந்தப் படம் ரொம்ப பிடித்திருக்கிறது. என்னுடைய பெயர்  படத்தில் வந்ததற்காக மட்டும் இல்லை. எனக்கு படம் ரொம்ப பிடித்திருக்கு. காதல் என்பது நண்பர்களுக்கும் பொருந்தும். நண்பர்களுக்குள்ளும் காதல் என்பது இருக்கும். குணா படத்தில் ஒரிஜினல் க்ளைமேக்ஸ் படத்தில் காண்பித்தது அல்ல. வேறொரு முடிவு இந்தப் படத்தில் உள்ளது" என்றார். 




மேலும் படிக்க


Anant Ambani-Radhika Wedding: முகேஷ் அம்பானி வீட்டில் டும் டும் டும்: பங்கேற்க போகும் முக்கிய பிரபலங்கள்! முழு லிஸ்ட் இதோ!