ரிலையன்ஸ் குழுமத்தின் (Reliance Industries) தலைவர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் அனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சென்ட்டின் திருமண விழாவில், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பில்கேட்ஸ் முதல் மார்க் ஜக்கர்பெர்க் வரை பல முக்கிய தொழிலதிர்பர்கள் பங்கேற்க உள்ளனர்.
அனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சென்டின் திருமணத்திற்கு முன்பாக நடக்கும் விழாவிகல் (Pre-wedding festivities) உலக அளவில் பிரபலம் வாய்ந்த பல முக்கிய தொழிலதிபர்கள், தலைவர்கள் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆனந்த் அம்பானி ராதிகா திருமணம் வரும் ஜூலை 12-ம் தேதி மும்பையில் நடைபெறுகிறது. திருமணத்திற்கு முன்பு வரும் மார்ச் 1-3ம் தேதி வரை சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் உலக அளவில் முக்கிய வாயந்தவர்கள் பங்கேற்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
யாரெல்லாம் பங்கேற்கிறார்கள்?
திருமண கொண்டாட்டங்கள், குஜராத்தில் ஜாம் நகரில் மார்ச் மாதம் துவங்க உள்ள நிலையில், உலக பணக்காரர்களுக்கும், தொழிலதிபர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளன.
- மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பில்கேட்ஸ் (Bill Gates),
- மெட்டா சி.இ.ஓ. மார்க் ஜக்கர்பெர்க் (Mark Zuckerberg),
- டிஸ்னி சி.இ.ஓ பாப் ஐகர், (Bob Iger,Disney)
- பிளாக்ராக் சி.இ.ஓ. லாரி பின்க் ( Larry Fink,BlackRock)
- மார்கன் ஸ்டான்லி சிஇஓ டெட் பிக் (Ted Pick)
- பிளாக்ஸ்டோன் ஸ்டீபன் ஸ்ச்வார்ஸ்மென் (Stephen Schwarzman)
- அமெரிக்க வங்கி தலைமை அதிகாரி பிரையன் தாமஸ் (Brian Thomas Moynihan)
- கத்தார் பிரதமர் முகமது பின் அப்துல் ரஹ்மான் பின் ஜாசிம் அல் தானி,
- டெக் முதலீட்டாளர் யூரி மைனர்,
- அடோப் சி.இ.ஓ. ஷாந்தனு நாராயன் (Shantanu Narayen)
- லூபா சிஸ்டம் சி.இ.ஓ. ஜேம்ஸ் முர்டாக் (James Murdoch)
- ஹில்ஹவுஸ் கேப்பிடல் பவுண்டர் ஜாங் லெய் (Zhang Lei)
- BP தலைமை நிர்வாகி Murray Auchincloss
- Exor சி.இ.ஓ John Elkann
- ப்ரூக்ஸ்ஃப்லீட் அசட் மேனேஜ்மெண்ட் தலைமை அதிகாரி ப்ரூஸ் ஃப்ளாட் (Bruce Flatt)
குஜராத் மாந்லத்தில் உள்ள ஜாம்நகர் பகுதியில் இந்த கொண்டாட்டத்தில் பங்கேற இருப்பதாக தெரிகிறது. இந்த இடம் அம்பானி க்ஜுடும்பத்திற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இடமாகும். ஆனந்த அம்பானி திருமண கொண்டாட்ட நிகழ்வு பிரம்மாண்டமாக நடத்த ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டு வருகிறது.
இந்த சிறப்பு கொண்டாட்ட நிகழ்ச்சி ஏற்பாடுகள் குறித்து நிகிழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் தெரிவித்த்தாக தகவல்கள் செய்திகளில் வெளியாகி வருகின்றன. அதன்படி, சிறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க வருபவர்கள் தனி நபர் ஒருவர் (Hand Luggage) ஹேண்ட் லக்கேஜ் கொண்டு வர அனுமதியில்லை. தம்பதியர் எனில் மூன்று சூட்கேஸ் (Suitcase) எடுத்து வரலாம். Hold லக்கேஜ் ஒன்று மட்டுமே எடுத்து வர அனுமதி.
மூன்று நாள் கொண்டாட்டம்
ஆன்ந்த அம்பானி- ராதிகா திருமண விழா கொண்டாட்டம் மார்ச் 1-ம் தேதி தொடங்கி 3-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் ஒவ்வொரு நாளும் தனி கருப்பொருள் உடன் நடக்க இருக்கிறது. ’themed' திட்டமிடப்பட்டுள்ளது.
முதல் நாள் ‘An Evening in Everland', இரண்டாம் நாள் ’elegant cocktail’, மூன்றாம் நாள் ‘‘A Walk on the Wildside’ என்று மூன்று நாட்களும் தீம் பின்பற்றப்பட உள்ளது. மூன்றாம் நாளில் ’jungle fever' என்று தனியாக உடை அணிவதற்கு தனியாக திட்டமிடப்பட்டுள்ளது. (Dress Code).
மூன்றாம் நாள் ‘Tusker Trails’ and ‘Hashtakshar’ நிகழ்வு நடைபெறும். டஸ்ட்கர் ட்ரெயில்ஸ் இயற்கை கொஞ்சம் வகையில் வெளியே நடைபெறும் ஒன்று. பாரம்பரியமிக்க இந்திய உடைகளில் ஒருநாள்.. லான்ரி சேவை, புடவை கட்டுவதற்கு ஸ்டைலிஸ்ட் உள்ளிட்ட பல வசதிகள் ஏற்பாடு செய்யப்பட உள்ளது. திருமண கொண்டாட்டத்தில் என்னென்ன சிறப்புகள் இருக்கென் இனிதான் தெரிய வரும்.