பிரபல நடன இயக்குநர் பிருந்தவின் இரண்டாவது படமான தக்ஸின் கதாநாயகன் ஹிருஷு ஹரூனை, நடிகர் கமல் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.


நடன இயக்குநராக இருந்து வந்த பிருந்தா, ஹே சினாமிக்காவை இயக்கி டைரக்டராக புது அவதாரம் எடுத்தார். அதன் பிறகு, தக்ஸ் படத்தை இயக்கி முடித்துள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்த நிலையில், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது.






இப்படத்தில், பாபி சிம்ஹா, ஆர்.கே.சுரேஷ்,  ஹிருஷு ஹரூன் மற்றும் முனிஷ்காந்த் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தின் முதல் போஸ்ட்ர் மூலம்,அனைவருக்கும் சரி சமமான கதாப்பாத்திரம் கிடைத்துள்ளது என்பது தெளிவாக தெரிகிறது. கன்னியாகுமரியில் ஷுட் செய்யப்பட்ட தக்ஸ், முழு ஆக்‌ஷன் படமாக அமைந்துள்ளது. இப்படத்திற்கு கைதி போன்ற படங்களுக்கு இசையமைத்த சாம்.சி.எஸ் இப்படத்துக்கு ம்யூசிக் போட்டுள்ளார். 






தக்ஸ் படத்தின் டீசரும் சில நாட்களுக்கு முன் வெளியானது  நடிகர் கமல் ஹாசன் படக்குழுவில் ஒருவரான ஹிருஷு ஹரூனின் கேரக்டர் ரிவீல் டீசரை பார்வையிட்டுள்ளார்.பின்னர் ஹிருஷுவுக்கு நேரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஹிருஷு ஹரூன், மாநகரம் படத்தின் ஹிந்தி ரீமேக்கான மும்பைக்கார் என்ற படத்திலும், க்ராஷ் கோர்ஸ் என்ற சீரிஸிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.


 


மேலும் படிக்க : Aditi Shankar : ‛எங்கள் தேனாக இருந்ததற்கு நன்றி...’ மெச்சி வாழ்த்திய சூர்யா நிறுவனம்!


Ajith Kumar: யாரென்று தெரிகிறதா இவன் தீ என்று புரிகிறதா.. பைலட்டாக மாறிய அஜித்.. வைரல் வீடியோ!