லோகேஷ் கனகாரஜ் இயக்கத்தில், அனிருத் இசையில், கமல்ஹாசன், விஜய்சேதுபதி, ஃபகத் பாஸில் உள்ளிட்ட பலர் நடித்திருந்த திரைப்படம் விக்ரம். இந்த படம் கடந்த ஜூன் 3ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றதையடுத்து திரையிடும் திரையரங்குகள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. படம் வெளியாகி 25 நாள்களை கடந்த வேளையிலும் திரையரங்கு நிறைந்த காட்சிகளாகவே உள்ளது. தமிழ்நாடு மட்டுமல்லாமல் கேரளாவிலும் இத்திரைப்படம் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது.


வசூல் அளவிலும் இத்திரைப்படம் வெற்றிகரமாகவே இருப்பதாக திரை விமர்சகர்கள் கூறியுள்ளனர். இத்திரைப்படம் வெளியான 17 நாள்களிலேயே 155 கோடி ரூபாய் வசூலை எட்டியிருப்பதாகவும், பாகுபலி 2 செய்த சாதனையான 152 கோடி ரூபாய் வசூல் சாதனையை 5 ஆண்டுகளுக்குப் பிறகு விக்ரம் முறியடித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இத்திரைப்படம் இன்னும் 4 முதல் 5 வாரங்களுக்கு திரையரங்குகளில் ஓடும் என்று கூறப்படும் நிலையில் 400 கோடி ரூபாய் வசூலை நோக்கி விக்ரம் திரைப்படம் சென்று கொண்டிருக்கிறது.


நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு சினிமாவை ரிலீஸ் செய்த கமல்ஹாசன் விக்ரம் படத்தின் மூலம் மீண்டும் தான் யார் என்று நிரூபித்துள்ளார். இதனால் சில காலம் தனது அரசியல் வாழ்க்கையில் இருந்து விலகி படங்களில் கமல்ஹாசன் தொடர்ந்து நடிக்க இருப்பதாக தெரியவந்துள்ளது. இதன் காரணமாக பல்வேறு முன்னணி தென்னிந்திய இயக்குநர்களுடன் உலகநாயகன் கதை கேட்டு வருவதாகவும் செய்திகள் பரவி வருகின்றனர். 


இந்தநிலையில் தற்போது நடிகர் கமல்ஹாசன், பிரபல மலையாள இயக்குநரான மகேஷ் நாராயணன் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். இதை கமலும் சமீபத்திய மேடையிலும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 


விக்ரம் படத்தை தொடர்ந்து கமலில் ராஜ்கமல் நிறுவனமே இந்த புதிய படத்தை தயாரிக்க, அதற்கான கதாபாத்திர தேர்வும் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதேபோல், இந்த திரைப்படத்திலும் நடிகர் கமல்ஹாசனுக்கு வில்லனாக விஜய் சேதுபதி அல்லது பகத் பாசில் நடிக்க வாய்ப்புகள் இருப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது. 




ஏற்கனவே மலையாள இயக்குநர் மகேஷ் நாராயணன், பகத் பாசிலை கொண்டு மாலிக் திரைப்படத்தை இயக்கினார். இது மலையாளம் திரையுலகை கடந்து தமிழ்நாடு அளவிலும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதன் காரணமாக பகத் பாசிலே நடிகர் கமலுக்கு வில்லனாக நடிக்க அதிக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. 


விஜய் சேதுபதி இல்லை, பகத் பாசிலும் இல்லை : 


விஜய் சேதுபதி மற்றும் பகத் பாசில் ஏற்கனவே விக்ரம் படத்தில் நடிகர் கமல்ஹாசனுடன் நடித்து விட்டதால், பிரபல மலையாள நடிகரை வைத்து எடுக்க வேண்டும் என்று மலையாள இயக்குநர் மகேஷ் நாராயணன் திட்டமிட்டுள்ளார். அதன் அடிப்படையில் மலையாள உலகின் சூப்பர் ஸ்டார் மம்மூட்டியிடம் இயக்குநர் கதை சொல்லிவிட்டதாகவும், இந்த கதை மம்மூட்டிக்கு மிகவும் பிடித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து விரைவில் இதுகுறித்த அப்டேட் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தில் கமல்ஹாசனுக்கு வில்லனாக மம்முட்டி நடிக்கலாம் என கூறப்படுகிறது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண