சாலைகளில் வேகமாக செல்வதை தடுக்கவும், பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் இடங்களிலும் பாதுகாப்பாகவும் இருக்க வேகத்தடைகள் அரசால் அமைக்கப்படுவது வழக்கம். கிராமம், நகரம், நெடுஞ்சாலை ஆகியவை பொறுத்து இவற்றில் அளவு மற்றும் எண்ணிக்கை மாறுபடும். இது சில நேரங்களில் வாகனங்களில் செல்வோருக்கு பெரும் தலைவலியாக அமையும். 


காரணம் மிக உயரமாக, அல்லது அகலம் குறைவாக போடப்படும் வேகத்தடைகளால் வாகனத்தின் அடிப்பகுதியில் சேதம் ஏற்படுவதோடு அதில் பயணிப்பவர்களுக்கும் உடலளவில் சோர்வு ஏற்படும்.  இதுதொடர்பாக அரசுக்கு கோரிக்கை விடுத்தும் இந்த பிரச்சனை முடிவுக்கு வருவதாக தெரியவில்லை. 


இதனிடையே மத்தியப்பிரதேசத்தில் வேகத்தடை ஒன்றில் கார் சிக்கிக் கொண்ட சம்பவம் வைரலாகியுள்ளது. அம்மாநிலத்தில் உள்ள  போபாலில் அபிஷேக் சர்மா என்பவர் தனது கியா செல்டோஸ் காரில் அங்குள்ள 10 ஆம் எண் பார்க்கிங் அருகிலுள்ள வேகத்தடை ஒன்றை கடக்க முயன்றுள்ளார்.அப்போது எதிர்பாராத விதமாக காரின் அடிப்பகுதி வேகத்தடை நடுவில் சிக்கிக் கொண்டு சீசாவை முன்னும், பின்னும் ஆடியது. 


அபிஷேக் சர்மா எவ்வளவோ முயன்றும் கார் ஒரு அடி கூட நகரவில்லை. ஒரு கட்டத்தில் பணம் செலவழித்து மீட்பு வாகனம் மூலம் அந்த கார் வெளியே இழுக்கப்பட்டது. கார் வேகத்தடையில் சிக்கிய புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட அவர், இந்த ஸ்பீட் பிரேக்கரை உருவாக்கிய சிறந்த பொறியாளருக்கு ஒரு பெரிய சல்யூட். கார்கள் அடிக்கடி இதில் சிக்கிக் கொள்கின்றன, ஆனால் நிர்வாகம் கண்டுகொள்ளாமல் உள்ளது என தெரிவித்துள்ளார். 






இதனைப் பார்த்த பலரும் அந்த வேகத்தடை அமைத்தவர்களை சரமாரியாக வசை பாட ஆரம்பித்தனர். இதுபோன்ற கவனக்குறைவான வேலைகள் நிர்வாகத்தால் எவ்வாறு கவனிக்கப்படாமல் போகிறது என அவர்கள் கேள்வி எழுப்பினர். இந்நிகழ்வு அம்மாநில மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண