இந்தியன் 2
ஷங்கர் இயக்கி கமல் நடித்துள்ள இந்தியன் 2 படம் வரும் ஜூலை 12-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. லைகா ப்ரோடக்ஷன்ஸ் இந்தப் படத்தை தயாரித்துள்ளது.
இந்தியன் 2 படத்தின் ப்ரோமோஷன் வேலைகளுக்கு இடையில் தெலங்கானா மாநிலத்தில் போதைப் பொருட்கள் பயன்பாட்டிற்கு எதிராக படக்குழு வெளியிட்டுள்ளது. இந்நிலையில் இந்தியன் 2 படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்து தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
நடிகர் சித்தார்த் சர்ச்சை
திரைப்படங்களுக்கு டிக்கெட் விலையை அதிகரிக்க விரும்பும் படக்குழுவினர் சமூக பொறுப்பு உடன் நடந்துகொள்ள வேண்டும் என்று முன்னதாக தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி கூறியிருந்தார். இது குறித்து பத்திகையாளர் சந்திப்பில் கலந்துகொண்ட படக்குழுவினரிடம் இந்த கேள்வி கேட்கப்பட்டது.
அப்போது பதிலளித்த சித்தார்த் . முன்பு ஒன்றிணைந்த ஆந்திராவிற்கு ஆணுறை குறித்த விழிப்புணர்வு விளம்பரத்தில் நான் நடித்திருந்தேன். எந்த முதலமைச்சர் சொல்லியும் நான் அப்படி செய்யவில்லை. எல்லா நடிகர்களுக்கு இயல்பாகவே ஒரு சமூக பொறுப்பு இருக்கிறது” என்று சித்தார்த் கூறியிருந்தார்.
சித்தார்த்தின் கருத்து சமூக வலைதளத்தில் தவறாக புரிந்துகொள்ளப் பட்டு சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து சித்தார்த் தான் கூறிய கருத்திற்கு விளக்கமளித்தார். ”ஊழல் மற்றும் போதைப் பொருட்களுக்கு எதிராக தான் இந்தியன் 2 படம் உருவாகி இருக்கிறது. போதைப்பொருட்களுக்கு எதிராக தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி எடுத்திருக்கும் இந்த முயற்சிக்கும் நான் முழு ஆதரவளிக்கிறேன்” என்று தெரிவித்திருந்தார்.
போதைப் பொருட்களுக்கு எதிராக பேசிய இந்தியன் 2 படக்குழுவினர்
இதனைத் தொடர்ந்து இந்தியன் 2 படத்தின் நடிகர்கள் கமல் , சித்தார்த் , சமுத்திரகனி மற்றும் இயக்குநர் ஷங்கர் ஆகியோர் போதைப் பொருள் பயன்பாடு மற்றும் சைபர் கிரைம்களுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேசி முதல்வர் ரேவந்த் ரெட்டியை பாராட்டியிருந்தார்கள். இந்த வீடியோவை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்து இந்தியன் 2 படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்துள்ளார் ரேவந்த் ரெட்டி.
மேலும் படிக்க : Gautham Vasudev Menon: மம்மூட்டியுடன் ஷூட்டிங்கைத் தொடங்கிய கெளதம் மேனன்: ஸ்டைலிஷ் ஆக்ஷனா, ரொமாண்டிக் படமா?