தக் லைஃப் 

மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடித்துள்ள தக் லைஃப் திரைப்படம் வரும் ஜூன் 5 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. சிம்பு , த்ரிஷா , அபிராமி , ஜோஜூ ஜார்ஜ் , நாசர் , அசோக் செல்வன் ஆகியோர் இந்த படத்தில் நடித்துள்ளார்கள். ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். ரவி கே சந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளது. 

தக் லைஃப் முன்பதிவுகள் தொடக்கம்

தக் லைஃப் படத்தின் முன்பதிவுகள் குறித்த தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது. நாளை ஜூன் 1 ஆம் தேதி காலை 8:01 மணிக்கு தக் லைஃப் படத்தி முன்பதிவுகள் தொடங்க இருக்கின்றன. தமிழ்நாட்டில் தக் லைஃப் படத்தின் சிறப்பு காட்சி காலை 9 மணி முதல் தொடங்கும் என எதிர்பார்க்கலாம். அமெரிக்கா உட்பட பிற நாடுகளில் அதிகாலை 4: 30 மணிக்கு தக் லைஃப் படத்தின் முதல் காட்சி தொடங்க இருக்கிறது. தமிழ், இந்தி , தெலுங்கு , கன்னடம் , மலையாளம் ஆகிய மொழிகளில் இந்த படம் வெளியாக இருக்கிறது

38 ஆண்டுகளுக்குப் பின் இணைந்த கமல் மணிரத்னம் 

நாயகன் படத்தைத் தொடர்ந்து கிட்டதட்ட 38 ஆண்டுகள் கழித்து கமல் மணிரத்னம் கூட்டணி தக் லைஃப் படத்தில் இணைந்துள்ளது. நாயகன் படம் இன்றளவும் கிளாசிக் படமாக கருதப்படுவதால் தக் லைஃப் படத்தின் மீது பெரியளவில் எதிர்பார்ப்புகள் இருந்து வருகிறது. 

தக் லைஃப் ஓடிடி ரிலீஸ்

தக் லைஃப் படத்தின் ஓடிடி ரிலிஸ் உரிமத்தை நெட்ஃப்ளிக்ஸ் தளம் ரூ 150 கோடிக்கு வாங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. திரையரங்கில் வெளியாகி 56 நாட்களுக்குப் பின்னரே அதாவது 8 வாரங்களுக்குப் பின்னரே இப்படம் ஓடிடியில் வெளியாக ஓடிடி நிறுவனம் முடிவெடுத்துள்ளதாக கமல் தெரிவித்துள்ளார். இந்த முடிவை ஓடிடி நிறுவனமே முன்வந்து எடுத்ததற்காக கமல் நன்றி தெரிவித்திருந்தார்.