விக்ரம் படத்தில் அழும் காட்சி ஒன்றில் கமல் தான் சொன்ன நேரத்தில் கண்ணீர் வரவழைத்த கதையை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பகிர்ந்துள்ளார். 


இது குறித்து லோகேஷ் கனகராஜ் பேசும் போது, “ஒரு சீனில் கமல் சாய்ந்து அழ வேண்டும். சொன்னபடியே சாய்ந்து இருந்தார். கண் கலங்கியது. ஆனால் எனக்கு அந்த ஷாட்டில் திருப்தி இல்லை. உடனே அவரிடம் சென்று நான் கண்ணீர் வழியும் போதே  நான் அடுத்த ஷாட்டுக்கு செல்கிறேன். அதனால் கண்ணீர் வழிய வேண்டும் என்றேன்.


உடனே அவர் எத்தனை செகண்டில் கண்ணீர் வழிய வேண்டும் என்று கேட்டார். உடனே நான் 3 ஆவது  செகண்டில் கண்ணீர் வழிந்தால் நன்றாக இருக்கும் என்றேன். நான் சொன்னபடியே 3 செகண்டுக்குள் கண்ணீரை வழிய வைத்து கமல் சார் ஷாட்டை முடித்தார். அதனை பார்த்ததும் எங்களுக்கு இங்கு  ஏதோ மேஜிக் நடப்பது போல இருந்தது.


 






பாரதிராஜா 


பாரதிராஜா ஒரு மேடையில் பேசும் போது, “சிகப்பு ரோஜாக்கள் படத்தின் கடைசி சீனில் அழ வேண்டும். அப்போது கமலிடம், நான் சொன்ன பின்னர்தான் கண்ணில் கண்ணீர் இருந்து வெளியே வர வேண்டுமென கண்டிஷன் போட்டேன். நான் சொன்ன மாதிரியே அவர் அழுது அந்த சீனை முடித்துக்கொடுத்தார்.


இதே போல இயக்குநர் சரண் கூறும் போது, “வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் படத்தில் அழுகிற காட்சி ஒன்றில், எந்த டயலாக்கிற்கு கீழ் கண்ணீர் வரவேண்டும் என்று கேட்டார். நான் டயலாக் சொல்ல, நான் சொன்ன இடத்தில் அவர் கண்ணீரை வரவழைத்தார்” என்று நெகிழ்ச்சியாக பேசினார்.


கமல்ஹாசன் நடிப்பில் வரும் ஜூன் மாதம் 3 ஆம் தேதி வெளியாக இருக்கும் திரைப்படம் ‘விக்ரம்’. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகியிருக்கும் இந்தப்படத்தின் டீஸர், மேக்கிங் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத்தொடர்ந்து, கடந்த 15ஆம் தேதி படத்தின் ஆடியோ நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் டிரெய்லரும் ரிலீஸ் செய்யப்பட்டது. இந்த டிரெய்லர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து ட்ரெண்டிங்கிலும் முதலிடம் பிடித்தது.