இந்தியன் 2


ஷங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் (Kamal Haasan)  நடித்துள்ள இந்தியன் 2 (Indian 2) படம் வரும் ஜூலை மாதம் வெளியாக இருக்கிறது. இந்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியாக இருந்த இப்படம் பல்வேறு காரணங்களால் ரிலீஸ் தேதியில் மாற்றம் கண்டுள்ளது. கடைசியாக ஜூன் மாதம் வெளியாகும் என படக்குழு அதிகாரப் பூர்வமான தகவல் வெளியாகி பின் ஜூலை மாதத்திற்கு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது. படத்தின் பாடல் காட்சி ஒன்று படமாக்கப்பட இருப்பதால் இந்தத் தாமதம் என தகவல் வெளியாகியது. இந்தியன் 2 படத்தில் ரகுல் ப்ரீத் சிங்,பிரியா பவானி ஷங்கர், காஜல் அகர்வால்,  சித்தார்த், பாபி சிம்ஹா, எஸ்.ஜே.சூர்யா, ஐஸ்வர்யா ராஜேஷ், ஜார்ஜ் மரியான் என ஏகப்பட்ட பேர் நடிக்கின்றனர். அனிருத் இப்படத்துக்கு இசையமைக்கிறார்.  


ப்ரோமோஷன் வேலைகளைத் தொடங்கிய கமல்






பான் இந்திய படமாக உருவாகியிருக்கும் இந்தியன் 2 படத்திற்கான ப்ரோமோஷன் வேலைகளை படக்குழு தொடங்கியுள்ளது. இதில் முதல்கட்டமாக இன்று நடைபெறவுள்ள சென்னை மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான ஐ.பி.எல் போட்டி வர்ணனையில் கமல் மற்றும் ஷங்கர் கலந்துகொள்ள மும்பை புறப்பட்டுச் சென்றுள்ளார்கள். இந்நிலையில், மும்பை விமான நிலையத்தில் கமல் வந்திறங்கிய புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.