விக்ரம் திரைப்படம் :


 கமல் நடிப்பில், லோகேஷ் கனகராஜ்  இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் விக்ரம் திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தை ராஜ்கமல் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.


முன்னணி நடிகர்கள்:


விக்ரம் திரைப்படத்தில் பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். விஜய் சேதுபதி, பஹத் பாசில், காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் இப்படத்தில் திருப்புமுனை ஏற்படுத்தும் கதாபாத்திரத்தில் சூர்யா நடித்துள்ளார்


திரைக்கு:


இத்திரைப்படம் வருகிற ஜீன் 3ஆம் தேதி, திரைக்கு வருகிறது. விக்ரம் திரைப்படத்தின் தமிழ்நாட்டு வெளியீட்டு உரிமையை, உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெய்ன்ட்  மூவீஸ் நிறுவனம் பெற்றுள்ளது.


பத்தல பத்தல பாடல்:


முதல் பாடலான பத்தல பத்தல பாடல், சில நாட்களுக்கு முன் வெளியானது. இப்பாடல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இருப்பினும்  அதன் பாடல் வரிகள் மத்திய அரசை விமர்சிப்பதாக சர்ச்சைகளும் எழுந்ததன.


போர்கொண்ட சிங்கம் பாடல் வெளியீடு






இந்நிலையில் விக்ரம் திரைப்படத்தின் இரண்டாம் பாடலான போர்கொண்ட சிங்கம் பாடல் வெளியாகி உள்ளது. இப்பாடல் தந்தை மகனுக்கும் இடையிலான அன்பை கூறும் பாடலாகவுள்ளது.


வரிகள்:


போர் கண்ட சிங்கம் வலி கொண்ட நெஞ்சம்


உடைந்தாலும் உனக்காக உயிர் வாழ்கிறேன்..


அழுகாதே மகனே என் ஆயுள் உனதே


இமைப்போல உனைக் காக்க நான் தேய்கிறேன் ஜீவனே..


என்ற இப்பாடலின் வரிகள், தந்தை மகன் மீது வைத்துள்ள பாசத்தை உணர வைக்கிறது. இப்பாடல் மூலம் இப்படம் தந்தை மகன் இடையேயான பாசத்திற்கு குறைவில்லாமல் இருக்கும் என தெரிகிறது.


இப்பாடலின் முழுமையாக கேட்க யூடியூப் லிங்கை கிளிக் செய்யவும்



 


Also Read: Watch Video: இந்திய ரசிகர்களுக்கு ஸ்வீட் சர்ஃப்ரைஸ் கொடுத்த இளையராஜா! அதிகாரப்பூர்வமாக அறிவித்த நெட்ஃப்ளிக்ஸ்!


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண