தெலுங்கு திரையுலகின் நடிகையான கல்பிகா கணேஷ் சமீப காலமாக தனது யூடியூப் சேனல் மூலம் மக்களின் கவனத்தை முழுமையாக ஈர்க்க முயற்சிக்கிறாரா என சந்தேகம் எழுகிறது. காரணம் அவரின் யூடியூப் சேனலுக்கு வியூஸ் மற்றும் சப்ஸ்கிரைபர்கள் அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பல பிரபலங்கள் பற்றின தகவல்களை வெளியிட்டு வருகிறார். அவை அனைத்தும் உண்மையான தகவல்களா அல்லது கவனத்தை ஈர்ப்பதற்காக அவர் கையாளும் யுக்தியா என்பது தான் நெட்டிசன்களின் சந்தேகமாக இருந்து வருகிறது.

பிரபலங்கள் குறித்து அவதூறு :
சமீப காலமாக பல பிரபலங்கள் குறித்த அதிர்ச்சியான தகவலைகளை சோசியல் மீடியாவில் வெளியிட்டு வருகிறார். இது தான் மக்களின் சந்தேகத்திற்கு முக்கியமான காரணம். சமீபத்தில் கல்பிகா இரண்டு ரேடியோ ஜாக்கிகள் பற்றியும் காமெடி நடிகர் குறித்தும் சில அவதூறான தகவல்களை தனது யூடியூப் மூலம் பகிர்ந்திருந்தார். அது மட்டுமின்றி இன்டர்நெட் பயனாளர்கள் எவ்வாறு மார்பிங் செய்யப்பட்ட புகைப்படங்களை ஆன்லைனில் வெளியிடுகிறார்கள் என்பதை விவரித்து இருந்தார்.
கல்பிகாவின் வலையில் சிக்கிய தன்யா :
துணை கதாபாத்திரங்கள் மூலம் அறியப்பட்ட கல்பிகா கணேஷ் வலையில் தற்போது சிக்கியுள்ளது 'காதலில் சொதப்புவது எப்படி', 'நீதானே என் பொன்வசந்தம்', 'ராஜா ராணி' போன்ற படங்களின் மூலம் பிரபலமான நடிகை தன்யா பாலகிருஷ்ணா. 'சீதம்மா வக்கிட்லோ சிரிமல்லே செட்டு' படத்தில் கேமியோ கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். நடிகை தன்யாவுக்கும் தமிழ் சினிமா இயக்குனர் பாலாஜி மோகனுக்கும் கடந்த ஜனவரி மாதம் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்து ஒரு வருட காலம் நிறைவடைய உள்ள நிலையிலும் இருவரும் இது குறித்து அதிகாரபூர்வமான அறிவிப்பை வெளிப்படையாக வெளியிடவில்லை. தற்போது தன்யா படங்களில் நடிப்பதை தவிர்த்து வருவதாகவும், புதிய வாய்ப்புகள் எதிலும் ஒப்பந்தமும் செய்யவில்லை. இதன் மூலம் அறியப்படுவது என்னவென்றால் கணவர் பாலாஜி மோகன், தன்யாவை படங்களில் நடிப்பதற்கு அனுமதிக்கவில்லை என வரிசையாக பலவற்றை அடுக்கிக் கொண்டே இருக்கிறார் நடிகை கல்பிகா கணேஷ்.
வீடியோ எப்படி அகற்றப்பட்டது :
கல்பிகா கணேஷ் யூடியூபில் அப்லோட் செய்த தன்யாவின் வீடியோ சில மணி நேரத்திலேயே நீக்கப்பட்டுள்ளது. யூடியூப் வீடியோக்கள் ஏதேனும் விதிகளை மீறினால் அவை நீக்கப்படலாம். வீடியோ அகற்றப்படுவதற்கு முன்னர் யூடியூபருக்கு மெயில் மூலம் முறையாக தெரிவிக்கப்படும். ஆனால் அது குறித்த எந்த ஒரு அறிவிப்பும் வரவில்லை என தெரிவித்துள்ளார் கல்பிகா. தன்யாவின் நண்பரான நடிகர் தனுஷ் தனது செல்வாக்கை பயன்படுத்தி தன்யாவின் வீடியோவை யூடியூப்பில் இருந்து நீக்கியதாக கல்பிகா சலசலப்பை ஏற்படுத்தியுள்ளார். இது குறித்த அதிகாரபூர்வமான தகவல் எதுவும் இதுவரையில் வெளியாகவில்லை.