கல்கி 2898 ஏடி
நாக் அஸ்வின் இயக்கத்தில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன், ஷோபனா, அனா பென், திஷா பதானி, பசுபதி உள்ளிட்ட திரை பிரபலங்களின் நடிப்பில் ஜூன் 27ம் தேதி வெளியான 'கல்கி 2898 AD ' திரைப்படம் பிரமிக்க வைக்கும் வகையில் வசூலை ஈட்டி சாதனை படைத்தது வருகிறது. வைஜயந்தி மூவிஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் சந்தோஷ் நாராயணன் இசையில் உருவான இப்படத்தின் எடிட்டிங் பணிகளை கோட்டகிரி வெங்கடேஸ்வரா ராவ் மிக சிறப்பாக செய்து இருந்தார். கிட்டத்தட்ட 600 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இப்படம் பான் இந்திய படமாக அனைத்து மொழிகளிலும் உலகெங்கிலும் வெளியானது.
இதுவரை கல்கி திரைப்படம் உலகளவில் 700 கோடி வசூலித்துள்ளது. அடுத்தடுத்த வாரங்களில் இப்படம் 1000 கோடி வசூலை எட்டி இந்த ஆண்டின் முதல் 1000 கோடி வசூல் எடுத்த படமாக சாதனைப் படைக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
வைரலாகும் கமல்ஹாசன் லுக்
கல்கி படத்தில் கமல்ஹாசன் சுப்ரீம் யாஸ்கின் என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வெறும் இரண்டே காட்சிகளில் கமல் இப்படத்தில் தோன்றினாலும் அவரது தோற்றம் மற்றும் நடிப்பு ரசிகர்களை மெய் சிலிர்க்க வைத்துள்ளது. கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கமல் எத்தனையோ தோற்றங்களில் நடித்துள்ளார். என்றாலும் ஒவ்வொரு முறையும் ஏதோ ஒரு வகையில் ரசிகர்களை தனது புதுமையான தோற்றத்தால் பிரம்மிக்க வைத்தபடியே இருக்கிறார். அந்த வகையில் கல்கி படத்தில் அவரது தோற்றம் தனித்துவமானதாக இருக்க வேண்டும் என்று படக்குழு நிறைய கவனம் செலுத்தியது. தனது கதாபாத்திரத்திற்கு ஏற்ற தோற்றத்தை வடிவமைக்க கமலும் இயக்குநர் நாக் அஸ்வினும் சேர்ந்து நிறைய உரையாடியப் பின் இறுதியாக ஒரு லுக்கை உறுதி செய்துள்ளார்கள். ஆனால் இந்த லுக்கை உறுதிபடுத்துவதற்கு முன்பாக கமலுக்கு நிறைய கெட் அப் போட்டு பார்த்திருக்கிறார்கள் .
அப்படி செட் ஆகவில்லை என்று நிராகரிப்பட்ட கமலின் லுக் ஒன்று தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. கமல் ரசிகர்களைப் பொறுத்தவரை இந்த லுக் கூட சூப்பரா இருக்கே என்று தான் சொல்கிறார்கள். ஆனால் கமல் இதை வேண்டாம் என்று சொல்லியிருக்கிறார் என்றால் அதற்கு பின் நிச்சயம் ஒரு காரணம் இருக்கும் என்று ரசிகர்கள் கருதுகிறார்கள்
மேலும் படிக்க : Indian 2: இந்தியன் 2 பாடலில் பொலிவியா லொக்கேஷன்.. பிரமாண்டத்தால் மீண்டும் வியக்க வைத்த ஷங்கர்!