Pongal 2024 Movie Release LIVE: 4 பொங்கல் படங்கள் இன்று ரிலீஸ்.. வெற்றி யாருக்கு? - அப்டேட்டுகள் உடனுக்குடன்..!
Pongal 2024 Movie Release LIVE Updates: 2024 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று வெளியாகும் படங்களின் அப்டேட்டுகளை உடனுக்குடன் இங்கு காணலாம்.
கேப்டன் மில்லர் விமர்சனம் : "தரமான ஆக்ஷன் விருந்து" தனுஷின் கேப்டன் மில்லர் பட விமர்சனம் இதோ!
"தூக்கம் தொலைத்த ஓர் இரவின் கதை ” - விஜய் சேதுபதியின் “மேரி கிறிஸ்துமஸ்” படத்தின் முழு விமர்சனம் இதோ..!
5 அத்தியாயங்களை கொண்ட பகுதியாக கேப்டன் மில்லர் படமாக்கப்பட்டுள்ளது.
விஜய் சேதுபதியுடன் மேரி கிறிஸ்துமஸ் படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார் பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப்
அருண் விஜய், ஏமி ஜாக்சன் உள்ளிட்ட பலரது நடிப்பில் இன்று வெளியான மிஷன் சாப்டர் ஒன் படம் சுமாரான விமர்சனங்களை பெற்று வருகிறது.
தனுஷ் நடித்த கேப்டன் மில்லரை பார்க்க, தனுஷின் இரு மகன்களான யாத்ரா, லிங்கா ஆகியோர் சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோஹினி திரையரங்கிற்கு வருகை தந்துள்ளனர்.
கேப்டன் மில்லரில் ஜி.வி.பிரகாஷ் அமைத்த பின்னணி இசை மற்றும் பாடல்கள் தரமாக உள்ளதால், இப்படம் சிறந்த இசைக்கான தேசிய விருதை வெல்ல வாய்ப்புள்ளது என சினிமா ரசிகர்கள் கூறிவருகின்றனர்.
கேப்டன் மில்லர் ஹாலிவுட் தரத்தில் எடுக்கப்பட்டுள்ளது என்றும் அசுரன் படம் போல் தரமாக உள்ளது என்றும் மக்கள் ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றன.
“இதுவரை தமிழ் சினிமாவில் காணாத சிறந்த போர் காட்சி, கேப்டன் மில்லர் படத்தில் இடம்பெற்றுள்ளது” என படம் பார்த்த ரசிகர் ஒருவர் பதிவிட்டுள்ளார்.
“கேப்டன் மில்லரை சிவாண்ணாவிற்காகதான் பார்க்கிறோம்” என ட்விட்டரில் பதிவிட்ட கன்னட சினிமா ரசிகர்கள், கொண்டாட்ட வீடியோவையும் ஷேர் செய்துள்ளனர்.
கோபி சுதாகர் நடத்திய இண்டர்வியூவில், “இரண்டாம் பாகத்திற்கான லீடை முதல் பாகத்தில் கொடுத்துள்ளோம்” என சிவகார்த்திகேயன் கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது ட்ரெண்டாகி வருகிறது.
தனுஷின் கேப்டன் மில்லர் படத்திற்கும் ட்விட்டரில் நல்ல நல்ல விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள அயலான் படத்திற்கு, ட்விட்டரில் பலரும் பாசிட்டிவ் விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர்.
ட்விட்டர் தளத்தில் எங்கு பார்த்தாலும், பொங்கல் ரிலீஸ் படங்கள் பற்றிய பதிவே காணப்படுகிறது. அத்துடன், ட்விட்டர் ட்ரெண்டிங்கிலும் அவை இடம்பெற்றுள்ளன. கேப்டன் மில்லர், அயலான், குண்டூர் காரம் உள்ளிட்ட படங்கள் தற்போது ட்ரெண்டிங்கில் உள்ளன.
“எங்கள் படக்குழுவின் மூன்று வருட உழைப்பை உங்களுக்கு சமர்ப்பிக்கிறோம். இன்று முதல் கேப்டன் மில்லர்.. ஓம் நமசிவாய” - நடிகர் தனுஷின் ட்விட்டர் பதிவு.
கேப்டன் மில்லர் படம் வெளியானதை முன்னிட்டு நடிகர் தனுஷ் எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கேப்டன் மில்லர் படக்குழுவினரின் 3 ஆண்டுகள் வியர்வை, ரத்தம் சிந்தி தியாகம் செய்து உருவான படம் உங்கள் முன்பாக ரீலிசுக்கு உள்ளது. ஓம் நமச்சிவாய..! என பதிவிட்டுள்ளார்.
2024 பொங்கல் பண்டிகைக்கான படங்கள் இன்று வெளியாகியுள்ள நிலையில் தியேட்டர்களில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
2024 ஆம் ஆண்டுக்கான பொங்கல் படங்கள் இன்று வெளியாகியுள்ள நிலையில் பெரும்பாலான காட்சிகளுக்கு டிக்கெட்டுகள் விற்பனையாகாததால் ரசிகர்கள் அதிர்ச்சி - சொந்த ஊருக்கு செல்ல மக்கள் ஆர்வம் காட்டுவதால் டிக்கெட் விற்பனை விறுவிறுப்பாக இல்லை என தியேட்டர் அதிபர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தெலுங்கில் பிரபல இயக்குநராக உள்ள த்ரி விக்ரம் ஸ்ரீநிவாஸ் அடுத்ததாக, அந்த திரையுலகின் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவை வைத்து எடுத்துள்ள படம் ‘குண்டூர் காரம்’. இந்த படத்தில் ஸ்ரீலீலா, மீனாட்சி சௌத்ரி, பிரகாஷ்ராஜ், ஜெகபதி பாபு, ரம்யா கிருஷ்ணன் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர். இப்படத்துக்கு தமன் இசையமைத்துள்ளார். இந்த படம் இன்று வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் சேதுபதி இந்தியில் நடித்துள்ள படம் “மேரி கிறிஸ்துமஸ்”. இந்த படத்தை ஸ்ரீராம் ராகவன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் ஹீரோயினாக கத்ரீனா கைஃப் நடித்துள்ளார். மேலும் தமிழ் வெர்ஷனுக்காக ராதிகா ஆப்தே, ராதிகா சரத்குமார், சண்முக ராஜன், ராஜேஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ப்ரீதம் இசையமைத்துள்ள மேரி கிறிஸ்துமஸ் படம் க்ரைம் த்ரில்லர் பாணியில் உருவாக்கப்பட்டுள்ளது.
ஏ.எல்.விஜய் இயக்கத்தில் அருண் விஜய் எமி ஜாக்சன், நிமிஷா சஜயன், இயல், அபி ஹாசன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள படம் ‘அச்சம் என்பது இல்லையே - மிஷன் சாப்டர் 1’.ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படம் ஆக்ஷன், சென்டிமென்ட் என அனைத்தும் கலந்து எடுக்கப்பட்டுள்ளது. மிஷன் சாப்டர் 1 படம் அருண் விஜய்யின் முதல் பொங்கல் வெளியீடாக தியேட்டரில் வெளியாகியுள்ளது.
நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் இன்று வெளியாகியுள்ளது கேப்டன் மில்லர் படம். இந்த படத்தை காண நள்ளிரவில் இருந்தே தனுஷ், சிவராஜ்குமார் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருப்பதோடு கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் இன்று வெளியாகியுள்ளது கேப்டன் மில்லர் படம். இந்த படத்தை காண நள்ளிரவில் இருந்தே தனுஷ், சிவராஜ்குமார் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருப்பதோடு கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
Background
பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், திரையுலகில் வெளியாகவுள்ள புதிய படங்கள் பற்றி காணலாம்.
- தொடரி, பட்டாஸ், மாறன் படங்களை தொடர்ந்து சத்யஜோதி நிறுவனம் நடிகர் தனுஷை வைத்து 4வது முறையாக தயாரித்துள்ள படம் ‘கேப்டன் மில்லர்’. இந்த படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ளார். மேலும் இப்படத்தில் பிரியங்கா மோகன், சிவராஜ் குமார், சந்திப் கிஷன், நிவேதிதா சதீஷ் , காளி வெங்கட், அதிதி பாலன், வினோஷ் கிஷன் என பலரும் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ள இந்த படம் ஜனவரி 12 ஆம் தேதி வெளியாகிறது. வரலாற்று கதையில் வெளியான ட்ரெய்லரை பார்க்கும் போது கேப்டன் மில்லர் இந்த முறை நிச்சயம் பந்தயம் அடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- கிட்டதட்ட நீண்ட காலமாக தயாரிப்பில் இருந்த அயலான் படம் பொங்கலுக்கு வெளியாகிறது. ரவிகுமார் இயக்கியுள்ள இப்படத்தில் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத்தி சிங், இஷா கோபிகர், யோகிபாபு, கருணாகரன், பால சரவணன், ஷரத் கேல்கர்,பானுப்ரியா என பலரும் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்த படத்தின் ட்ரெய்லரை பார்க்கும் போது தரமான தமிழ் ஹாலிவுட் படம் பார்த்த ஃபீல் ஏற்படுவதாக பலரும் தெரிவித்துள்ளனர். ஆக இந்த பொங்கல் அயலான் பொங்கல் தானா என்பது இன்னும் ஒரு சில நாளில் தெரிந்து விடும்.
- ஏ.எல்.விஜய் இயக்கத்தில் அருண் விஜய் எமி ஜாக்சன், நிமிஷா சஜயன், இயல், அபி ஹாசன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள படம் ‘அச்சம் என்பது இல்லையே - மிஷன் சாப்டர் 1’.ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படம் ஆக்ஷன், சென்டிமென்ட் என அனைத்தும் கலந்து எடுக்கப்பட்டுள்ளது.
- தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் சேதுபதி இந்தியில் நடித்துள்ள படம் “மேரி கிறிஸ்துமஸ்”. இந்த படத்தை அந்தாதூன் படத்தை இயக்கிய ஸ்ரீராம் ராகவன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் ஹீரோயினாக கத்ரீனா கைஃப் நடித்துள்ளார். மேலும் சஞ்சய் கபூர், வினய் பகத், ராதிகா ஆப்தே உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ப்ரீதம் இசையமைத்துள்ளார். இந்த படம் தமிழில் டப் செய்யப்பட்டு 12 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
- தெலுங்கில் பிரபல இயக்குநராக உள்ள த்ரி விக்ரம் ஸ்ரீநிவாஸ் அடுத்ததாக, அந்த திரையுலகின் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவை வைத்து எடுத்துள்ள படம் ‘குண்டூர் காரம்’. இந்த படத்தில் ஸ்ரீலீலா, மீனாட்சி சௌத்ரி, பிரகாஷ்ராஜ், ஜெகபதி பாபு, ரம்யா கிருஷ்ணன் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர். இப்படத்துக்கு தமன் இசையமைத்துள்ளார். இந்த படம் ஜனவரி 12 ஆம் தேதி வெளியாகிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -