நடிகையர் திலகம் என்ற சூப்பர் ஹிட் படத்தை இயக்கிய நாக் அஸ்வின், அடுத்ததாக இயக்கி வரும் திரைப்படம் 'கல்கி 2898 AD'. சயின்ஸ் பிக்ஷன் ஜானரில் உருவாகும் இப்படத்தை 600 கோடி ரூபாய் பட்ஜெட்டில் மிக பிரமாண்டமாக தயாரித்து வருகிறது வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம். இரண்டு பாகங்களாக வெளியாக உள்ள இப்படத்தின் முதல் பாகம் வரும் ஜனவரி 2024ல் வெளியாக உள்ளது.  


பான் இந்தியா படம்


இதுவரையில் இந்திய சினிமாவில் வெளியாகாத ஒரு கதைக்களத்துடன் இந்தி மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டது வருகிறது. தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இப்படம் வெளியாக உள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்திற்கு ஜோர்ட்ஜே ஸ்டோஜில் கோவிச் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டுள்ளார். முதலில் ப்ராஜெக்ட் கே என பெயரிடப்பட்டு இருந்த இப்படத்திற்கு கல்கி 2898 AD என டைட்டில் வைக்கப்பட்டது. 


2898 காலகட்டம் :


பிரபாஸ், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், பசுபதி உள்ளிட்டோரின் நடிப்பில் உருவாகி வரும் இப்படத்தில் நடிகர் கமல்ஹாசன் வில்லனாக நடிக்கிறார். விஷ்ணுவின் கல்கி அவதாரமாக நடிகர் பிரபாஸ் நடிப்பதாகவும் இது 2898ல் காலகட்டத்தில் நடைபெறுவது போலவும் சித்தரிக்கப்பட்டுள்ளது எனக் கூறப்படுகிறது. 


வரவேற்பு பெற்ற கிளிம்ப்ஸ் வீடியோ :


பிரபாஸ் போஸ்டர் ஒன்று வெளியாகி ஏராளமான விமர்சனங்களை பெற்று வந்த நிலையில் அட்டகாசமான கிராஃபிக்ஸ் காட்சிகள் நிறைந்த படத்தின் முதல் கிளிம்ப்ஸ் வீடியோ வீடியோ வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. கதாயுதம் வில்லன் கையில் கிடைத்ததால் அவன் எப்படி தவறாக அதை பயன்படுத்துகிறான் என்பது தான் படத்தின் கதைக்களம் என கூறப்படுகிறது. 


பிக் பி பர்த்டே ஸ்பெஷல் :


இந்நிலையில், மிகவும் எதிர்பார்க்கப்படும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்டரை வெளியிட்டுள்ளது கல்கி படக்குழு. நடிகர் அமிதாப்பச்சன் 81ஆவது பிறந்தநாளை முன்னிட்டு ஸ்பெஷல் ரிலீஸாக "கல்கி 2898 AD " திரைப்படத்தில் நடிகர் அமிதாப்பச்சன் தோற்றத்தை சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார் தயாரிப்பு குழுவினர். 


"உங்கள் பயணத்தின் ஒரு பகுதியாக இருப்பதிலும், உங்களின் மகத்துவத்திற்கு சாட்சியாக இருப்பதையும் ஒரு பாக்கியமாக கருதுகிறோம். பிறந்தநாள் வாழ்த்துக்கள் அமிதாப்பச்சன் சார்" என்ற குறிப்பையும் பகிர்ந்துள்ளனர்.   


 






எகிறும் எதிர்பார்ப்பு :


இந்திய திரையுலகில் மிகவும் பெரிய ஜாம்பவான்களான அமிதாப்பச்சன் மற்றும் கமல்ஹாசன் நடிக்கும் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பாகுபலி திரைப்படத்திற்கு பிறகு இந்த கல்கி திரைப்படம் மாபெரும் ஒரு வெற்றி படமாக அமையும் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் உள்ளது.