அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன் உள்ளிட்ட திரை பிரபலங்கள் நடித்துள்ள கல்கி படம் வெளியாகிய முதல் நாளில் உலக அளவில் ரூ. 191 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரப் பூர்வ தகவல் வெளியிட்டுள்ளது
கல்கி திரைப்படம் முதல் நாள் வசூல் விவரம்:
2021-ல் நெட்ப்ளிக்ஸில் வெளியான ‘பிட்டா கதலு’ என்ற ஆந்தாலஜி திரைப்படத்தில் சயின்ஸ் ஃபிக்சன் மற்றும் தொழில்நுட்ப ரீதியாகவும் இயக்குநரின் ஸ்டைல் ரசிகர்களிடையே கவனம் ஈர்த்தது. கல்கி படத்தையும் நாக் அஸ்வின் இயக்கியிருக்கிறார். பிரம்மாண்டமாக வெளியாகியுள்ள திரைப்படம் ரசிகர்களிடன் வரவேற்பை பெற்றுள்ளது. பாரதப் போர் முடிந்து 6 ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு தொடங்கும் கல்கி படத்தில் கதை பல சுவாரஸ்யமான விசயங்கள் குறிப்பிடும்படி அமைந்துள்ளதால் ரசிகர்களுக்கு பிடிக்கிறது.
இந்தப் படம் வெளியாகிய முதல் நாளில் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.5.9 கோடியும் கேரளாவில் ரூ.2.75 கோடியும் வசூல் செய்துள்ளது. இந்தியாவில் மொத்தமாக ரூ.95 கோடி வசூல் செய்துள்ளது. சலார், ஆதிபுரூஷ் படங்களின் முதல் நாள் வசூலை முறியடித்துள்ளது. இருப்பினும் ஆர்.ஆர்.ஆர். படத்தின் வசூலை முறியடிக்க தவறியுள்ளது. ஆர்.ஆர்.ஆர். திரைப்படம் முதல்நாளில் ரூ. 223கோடி வசூலித்திருந்தது. பிரபாஸ் படங்களில் முதல் நாள் வசூலில் இந்தப் படம் அதிக வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்திய அளவில் முதல்நாளில் வசூலில் 3ஆவது இடத்தையும் பிடித்துள்ளது. வரலாற்று கதாப்பாத்திரங்கள், க்ராபிக்ஸ் என கதை விறுவிறுப்பாக நகர்வதால் ரசிகர்கள் திரையரங்குகளில் பார்த்து வியந்து வருகின்றனர்.
வைஜயந்தி மூவிஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்திய சினிமா வரலாற்றில் மிகப்பெரிய சயன்ஸ் ஃபிக்ஷன் படமாக 600 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டுள்ளது.
இதிசாகக் கதையை மையமாக வைத்து அதில் சயன்ஸ் ஃபிக்ஷன் வகையில் எடுக்கப்பட்டுள்ள திரைப்படத்தில் க்ராபிக் காட்சிகள் சிறப்பாக எடுக்கப்பட்டுள்ளது. ஹாலிவுட் தரத்திற்கு இருக்கிறதா என்ற கேள்விக்கு பதில் அளிக்கும் வகையில் எடுக்கப்பட்டுள்ளதாக ரசிகர்கள் பாராட்டியுள்ளனர்.