நாக் அஸ்வின் இயக்கத்தில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன், ஷோபனா, அனா பென், திஷா பதானி, பசுபதி உள்ளிட்ட திரை பிரபலங்களின் நடிப்பில் ஜூன் 27ம் தேதி வெளியான 'கல்கி 2898 AD ' திரைப்படம் பிரமிக்க வைக்கும் வகையில் வசூலை ஈட்டி சாதனை படைத்தது வருகிறது. வைஜயந்தி மூவிஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் சந்தோஷ் நாராயணன் இசையில் உருவான இப்படத்தின் எடிட்டிங் பணிகளை கோட்டகிரி வெங்கடேஸ்வரா ராவ் மிக சிறப்பாக செய்து இருந்தார். கிட்டத்தட்ட 600 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இப்படம் பான் இந்திய படமாக அனைத்து மொழிகளிலும் உலகெங்கிலும் வெளியானது. 


மஹாபாரதம் போரில் துவங்குகிறது 'கல்கி 2898 AD ' திரைப்படம். கிருஷ்ணரின் கல்கி அவதாரத்தை தடுத்து நிறுத்த முயற்சிக்கிறார் வில்லன் கமல்ஹாசன். அவரின் முயற்சி வெற்றிபெற்றதா? கிருஷ்ணரின் கல்கி  அவதாரம் நடைபெற்றதா என்பது தான் கல்கி படத்தின் கதைக்களம். முதல் பாகத்தின் முடிவில் பிரபாஸ் தான் மஹாபாரதத்தின் கர்ணன் என்பதோடு படம் முடிக்கப்படுகிறது. ஒரு ட்விஸ்டுடன் முதல் பாகத்தை முடித்துள்ளது ரசிகர்களுக்கு சுவாரசியத்தை ஏற்படுத்தியுள்ளது. 


 



அதன் தொடர்ச்சியாக கல்கி இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. கல்கி முதல் பாகத்தின் படப்பிடிப்பு சமயத்திலேயே இரண்டாம் பாகத்தில் பாதி கதையை படமாக்கி விட்டது படக்குழு. கமல் நடிக்க இருக்கும் காட்சிகள் மற்றும் ஆக்ஷன் அதிரடி காட்சிகள் மட்டுமே இனி படமாக்கப்பட வேண்டும் என கூறப்படுகிறது. எனவே கல்கி பார்ட் 2 , 2025ம் ஆண்டில் வெளியாகலாம் என கூறப்படுகிறது.  


வெளியான முதல் நாளில் இருந்தே கல்கி 2898 AD திரைப்படம் வசூலில் சக்கை போடு போட்டு வருகிறது. அந்த வகையில் 6வது நாளுக்கான இன்றைய வசூல் நிலவரம் குறித்த அறிவிப்பு ஒன்றை சாக்னிக் வலைத்தளம் வெளியிட்டுள்ளது. அவர்களின் அறிக்கையின் படி இந்திய அளவில்  மட்டுமே 28 கோடி வசூல் செய்துள்ளது. இந்தியில்  14 கோடியும் தெலுங்கில் 12  கோடியும் வசூல் செய்துள்ளது. தமிழ் மற்றும் மலையாளத்தில் தனித்தனியாக 1.2 கோடி வசூல் செய்துள்ளது. எனவே 6ம் நாள் முடிவில்  சாக்னிக் வலைதளத்தின் யூகத்தின் படி உலகளவில் 700 கோடி வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.