தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக இருந்தவர் நடிகை மீனா. சமீபத்தில் அவரது கணவர் உடல்நல குறைவால் காலமானார். ஆனால் அவரது தோழிகள் அவருக்கு பக்கபலமாக இருந்து சோகத்தில் இருந்து மீண்டு வர உதவியாக இருக்க வேண்டும். விஜயகுமாரின் மகள் ப்ரீதா, நடிகை ரம்பா, நடிகை சங்கீதா, சினேகா, அவரது அக்கா  மற்றும் கலா மாஸ்டர் உள்ளிட்டவர்கள் மீனாவுக்கு மிகுந்த நெருக்கமானவர்கள். இதில் கலா மாஸ்டர் மீனாவுடன் எமோஷ்னலாகவே கனெக்ட் ஆகியிருப்பதை அவரின் இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள் மற்றும் பேட்டிகள் வாயிலாகவே பார்க்க முடிகிறது. மீனா கடந்த செப்டம்பர் 16-ஆம் தேதி பிறந்தநாளை கொண்டாடினார். அதற்கு அவரது நண்பர்கள் பல சர்ப்ரைஸ் ஏற்பாடுகளை செய்திருந்தனர். 







அப்படித்தான் கலா மாஸ்டரும் ஒரு பிறந்தநாள் பார்ட்டியை ஏற்பாடு செய்து , அவருக்கு மறைந்திருந்து சர்ப்ரைஸ் ட்ரீட் கொடுத்திருக்கிறார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. காலா மாஸ்டர் இருப்பதை அறியாத மீனா , இயல்பாக புன்னகைத்தபடி வருகிறார். அப்போது மீனாவின் மகள் நைனிகா உள்ளிட்ட சிலர் இருக்கின்றனர். ‘ஆலப்போல் வேலப்போல் ‘ பாடல் ஒலிக்க சிரித்தபடியே வரும் மீனாவை , மறைந்திருந்து சர்ப்ரைஸ் செய்கிறார். சர்ப்ரைஸ் ஷாக்கில் வாயடைத்து போய்விட்டார் மீனா. பின்னர் இருவரும் ஒருவரை ஒருவர் கட்டியணைத்துக்கொள்ள , ஹாப்பி பர்த்டே என்கிறார் கலா மாஸ்டர்.







இதே போலத்தான் கலா மாஸ்டரின் பிறந்தநாளுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழாவில் , மீனா கலந்துகொள்ள முடியாது என தெரிவித்துவிட்டு , பின்னர் சர்ப்ரைஸ் கொடுத்தார். அதனை சற்றும் எதிர்பாராத கலா மாஸ்டர் உடைந்து அழுதேவிட்டார். இது குறித்து கேட்டபொழுது “ நான் பலமுறை வேண்டுகோளாக கேட்டும் மீனா வரவே முடியாது என கூறிவிட்டாள். எனக்கு அது கொஞ்சம் கஷ்டமாக இருந்தது..ஆனால் அவள் இப்படி எனக்கு சர்ப்ரைஸ் ஷாக் கொடுப்பாள் என நினைக்கவில்லை“ என்றார்.