நடிகை காஜல் பசுபதி, முதன் முதலாக கமல் ஹாசனின் படமான வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்ஸில் ஒரு சிறு கதாப்பாத்திரத்தில் நடித்து திரையுலகில் அறிமுகமானார். இவர் அதைத் தொடர்ந்து கலகலப்பு 2 போன்ற பல படங்களில் நடித்துள்ளார். அப்படி அவர் நடித்தாலும், கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் பங்குபெற்று பேசும் பொருளாக மாறினார். 54 நாளில் பிக் பாஸ் வீட்டின் உள் நுழைந்த கஜோல், 70 நாளே எலிமினேட் செய்யப்பட்டார். சீக்கரமாக எலிமினேட் ஆனாலும், இவர் செய்த செயல்களை யாராலும் மறக்கவே முடியாது.


சினி உலகில் நடக்கும் சம்பவங்கள் பற்றியும் சமூக பிரச்சனைகள் பற்றியும் உறுதியான கருத்துகளை வெளிப்படுத்துவதை தனது வேலையாக கொண்டு இருப்பவர் காஜல். இப்போது, பப்லு ப்ரித்விராஜின் இரண்டாவது திருமணம் பற்றி பலரும் சர்ச்சை கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.



‛பல்லு இருக்கவன் பகோடா சாப்புடுறான்... உங்களுக்கு என்னயா பிரச்னை’ -பப்லு திருமணத்திற்கு பதிலளித்த காஜல்


57 வயதான நடிகர் பப்லு ப்ரித்விராஜ், 23 வயதான ஒரு பெண்ணை இரண்டாவது முறையாக திருமணம் செய்துள்ளார். இந்த சர்ச்சைகளுக்கு சூப்பராக ஒரு கருத்தினை வெளியிட்டு இருக்கிறார் கஜோல் “ பல்லு இருக்கவன் பகோடா சாப்புடுறான். இதுல உங்களுக்கு என்னயா பிரச்சன. ஹாஷ்டாக் டாக்சிக் வொர்ல்ட். பொறாமை புடிச்ச உலகம்.” என்று ட்விட் செய்துள்ளார்.






நடிகர் பப்லு ப்ரித்விராஜ், குழந்தை நட்சத்திரமாக தமிழ் திரையுலகில் கால் தடம் பதித்தார். மர்மதேசம், வாணி ராணி, ரமணி Vs ரமணி  மற்றும் அரசி ஆகிய பிரபல நாடகங்களில் நடித்துள்ளார். இவர் பீனா என்பவருடன் 30 வருடங்கள் வாழ்ந்துள்ளார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். இருவரும் பிரிந்த பின், மலேசியாவை சார்ந்த 23 வயது பெண்ணை மணந்துள்ளார். சமீபமாக, திருமணம் குறித்த கேள்வியை, அவரிடம் கேட்ட போது “ அப்படி ஒன்றும் கல்யாணம் நடிக்கவில்லை. நான் ஒரு பெண்ணை திருட்டுத்தனமாக திருமணம் செய்துகொள்ள மாட்டேன். அப்படி செய்தாலும் எல்லோருக்கும் சொல்லிவிட்டுதான் செய்வேன்” என்று பதிலளித்தார் பப்லு.


மேலும் படிக்க : பீம்லா நாயக்.. தேஜாவு... மற்றும் பல உறவினர்கள் எல்லாம் வர்றாங்க... இது கலர்ஸின் கலர் தீபாவளி!