மக்களின் பல நாட்கள் எதிர்பார்புகளுக்கு மத்தியில் நேற்று வெளியான படங்கள் ப்ரின்ஸ் மற்றும் சர்தார். ப்ரின்ஸ் படம் ”க்ரிஞ், கடி ஜோக்குகள் நிறைந்துள்ளது” என விமர்சனங்களை பெற்ரு வரும் நிலையில், சர்தார் படம் ’சுமார்’ ரகம் என்றும், ‘சூப்பராக உள்ளது’ என்றும் எதிர்மறை விமர்சனங்களைப் பெற்று வருகிறது.


சர்தார்-ப்ரின்ஸ்:


தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை தினங்களில், முக்கிய ஹீரோக்களின் திரைப்படங்கள் வெளியிடப்படுவது வழக்கம். அந்த வகையில்,இந்த வருட தீபாவளியை முன்னிட்டு கார்த்தி நடித்த சர்தார் படமும், சிவகார்த்திகேயனின் ப்ரின்ஸ் படமும் நேற்று வெளியானது. காமெடி-காதல் படமாக உருவான ப்ரின்ஸ் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக வெளிநாட்டு நடிகை மரியா நடிக்க, சத்யராஜ் ஹீரோவின் அப்பாவாக நடித்திருந்தார். ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்புகளை உயர்த்திய இப்படம், ரிலீஸான முதல் நாளில் இருந்தே, பெரிய அளவில் நெகடிவ் விமர்சனங்களை சந்தித்து வருகிறது. சிலர், “சிவகார்த்திகேயனுக்கு காமெடி சென்ஸ் நன்றாகத்தான் உள்ளது. அதற்கென்று எல்லாப் படங்களையும் அதே போலவா தேர்வு செய்வது?” என்று ஆதங்கத்துடன் கேள்வியெழுப்புகின்றனர். 




ப்ரின்ஸ் ஒரு பக்கம் மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யாமல் போக, கார்த்தயின் சர்தார் படம் அடுத்து கலவையான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது. ஸ்பை த்ரில்லராக உருவாகியுள்ள இப்படத்தில் கார்த்தி அப்பா-மகன் என இரு வேடங்களில் நடித்துள்ளார். அது மட்டுமன்றி இப்படத்தில் கார்த்தி, 15 கெட்-அப்புகள் நடித்துள்ளார். 100க்கும் மேற்பட்ட லோகேஷன்களில் சர்தார் எடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி, நடிகை லைலா பல வருடங்களுக்கு பிறகு சர்தார் மூலம் கம்-பேக் கொடுத்துள்ளார். இத்தனை சிறப்பம்சங்கள் படத்தில் இருப்பினும், “இன்னும் கொஞ்சம் நல்லாயிருந்திருக்கலாம்..” என மக்கள் தியேட்டர்களில் வெதும்பத்தான் செய்கின்றனர். 




தமனின் இசையில் ப்ரின்ஸ் படத்தில் இடம்பெற்றுள்ள ஜெஸிகா, பிம்பிளிக்கா பிளாப்பி உள்ளிட்ட அனைத்து பாடல்களும் ரசிகர்களை கவர்ந்துள்ளது. ஆனால் சர்தார் படத்திலோ, கார்த்தி பாடியுள்ள ஏறுமயிலேறு பாடல் மட்டும் ஹிட் அடித்துள்ளது.  சர்தார் படத்தில் கதை ஓரளவு ஸ்ட்ராங்காக இருப்பதால், போட்ட பட்ஜெட்டை படம் எடுத்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


 






ப்ரின்ஸை முந்திய சர்தார்:


உலகம் முழுவதும் வெளியாகியுள்ள சர்தார் மற்றும் ப்ரின்ஸ, அமெரிக்காவிலும் வெளியானது. ஆனால், அங்கே ப்ரின்ஸ் படத்தை வசூலில் முந்தியுள்ளது சர்தார். ப்ரின்ஸ் படத்தின் வசூல் 33,797 அமெரிக்க டாலர்களாக (இந்திய ரூபாய் மதிப்பின் படி, 2,789,637) இருக்க,  சர்தார் படம், 43,757 டாலர்கள் வசூல் செய்துள்ளது. இது இந்திய ரூபாயின் மதிப்புபடி, 36 லட்சத்து, 11 ஆயிரத்து 745 ரூபாயாகும்.


 






கார்த்தி இதற்கு முன்னதாக நடித்துள்ள பொன்னியின் செல்வன் திரைப்படமும், அமெரிக்காவில் வசூல் சாதனை புரிந்தது குறிப்பிடத்தக்கது.