kajal Aggarwal | வாவ்.. காஜல் அகர்வால் கொடுத்த ஹேப்பி நியூஸ்...

`உமா’ கதாபாத்திரமாக காஜல் அகர்வால் நின்றுகொண்டிருக்க, பின்னணியில் முன்னணி கதாபாத்திரங்களின் முகங்கள் பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்தும் விதமாக ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் உருவாக்கப்பட்டுள்ளது. 

Continues below advertisement

தென்னிந்தியத் திரைப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள நடிகை காஜல் அகர்வால் தற்போது பாலிவுட் திரையுலகில் நுழைந்து, மிக முக்கியமான முடிவுகளைத் தனது தொழில் வாழ்க்கையில் எடுத்து வருகிறார். அவற்றில் ஒன்றாக, பெண் கதாபாத்திரத்தை மையப்படுத்தியுள்ள `உமா’ என்ற இந்தி திரைப்படத்தில் முன்னணி நாயகியாக நடித்துள்ளார் காஜல் அகர்வால். இதுகுறித்து தனது சமூக வலைத்தளப் பக்கங்களில் உறுதி செய்துள்ள நடிகை காஜல் அகர்வால், தான் கதாநாயகியாக நடித்துள்ள `உமா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரைப் பகிர்ந்துள்ளார். 

Continues below advertisement

`உமா’ கதாபாத்திரமாக காஜல் அகர்வால் நின்றுகொண்டிருக்க, பின்னணியில் முன்னணி கதாபாத்திரங்களின் முகங்கள் பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்தும் விதமாக `உமா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் உருவாக்கப்பட்டுள்ளது. 

உமா என்பவரின் கதையாக உருவாக்கப்பட்டிருப்பதாக எதிர்பார்க்கப்படும் இந்தப் படத்தை இயக்குநர் தாதகாத் சின்ஹா இயக்கியுள்ளார்; மிராஜ் குழுமத்தைச் சேர்ந்த அவிஷேக் கோஷ், மந்தராஜ் பலிவால் ஆகியோர் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர். `உமா’ படத்தில் டின்னு ஆனந்த், ஹர்ஷ் சாயா, மேக்னா மாலிக், கௌரவ் ஷர்மா, அயுஷி தாலுக்தர், கியான் ஷர்மா ஆகிய நடிகர்கள் முன்னணி வேடங்களில் நடித்துள்ளனர். `படத்தின் இறுதிகட்டப் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. படத்தின் லுக்கையும், உணர்வையும் வெளிப்படுத்தும் விதமாக ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது. `உமா’ படம் குடும்பத்துடன் ரசிக்க வைப்பதாக இருக்கும். இந்தப் படம் நினைத்தபடி சரியாக வந்துகொண்டிருப்பதில் மிக்க மகிழ்ச்சி' என்று படத்தின் இயக்குநர் தாதகாத் சின்ஹா கருத்துகளைப் பகிர்ந்துள்ளார். 

குடும்பத்தினராக வெவ்வேறு கதாபாத்திரங்களைக் கொண்ட முன்னணி நடிகர்கள் அனைவரும் வாழ்ந்து கொண்டிருக்கும் வீட்டிற்குள் நுழையும் `உமா’ என்ற அந்நிய நபரின் வருகைக்குப் பிறகு நிகழும் சம்பவங்களே இந்தப் படத்தின் ஒன்லைன் எனக் கூறப்படுகிறது. கொல்கத்தாவில் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டிருக்கும் நிலையில், `உமா’ படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், `உமா’ படம் வெளியிடப்படும் நாள் குறித்த தகவல்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. 

நடிகை காஜல் அகர்வால் தற்போது `ஹே சினாமிகா’, `ஆச்சர்யா’ முதலான திரைப்படங்களில் நடித்து வருகிறார். பிருந்தா இயக்கும் `ஹே சினாமிகா’ படத்தில் நடிகை அதிதி ராவ் ஹைதரி, நடிகர் துல்கர் சல்மான் ஆகியோருடனும், `ஆச்சர்யா’ படத்தில் தெலுங்கு சினிமாவின் மூத்த நடிகர் சிரஞ்சீவியுடனும் நடித்து வருகிறார் நடிகை காஜல் அகர்வால். 

இன்ஸ்டாகிராம், ட்விட்டர் ஆகிய சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து ஆக்டிவாக இருப்பதோடு, தனது ரசிகர்களை மகிழ்விக்கத் தனது படங்களை அவ்வபோது வெளியிட்டு வரும் காஜல் அகர்வால், இன்ஸ்டாகிராம் தளத்தில் நடிகைகள் சமந்தா, பூஜா ஹெக்டே ஆகியோரைவிட அதிகமாக ஃபாலோவர்களைப் பெற்றுள்ளார். 20 மில்லியன் ஃபாலோவர்களைப் பெற்றுள்ள நடிகை காஜல் அகர்வால் சமீபத்தில் தனது ஃபாலோவர்களுக்கு நன்றி தெரிவித்து காணொளி ஒன்றையும் வெளியிட்டிருந்தார்.

Continues below advertisement
Sponsored Links by Taboola