காஜல் அகர்வால் 


தமிழ், தெலுங்குத் திரையுலகத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை காஜல் அகர்வால். இவர் கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான பழனி திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். நான் மகான் அல்ல , மாற்றான் , துப்பாக்கி என இவர் நடித்த பல படங்கள் கோலிவுட்டில் சூப்பர் ஹிட் . புகழின் உச்சியில் இருக்கும் பொழுதே தொழிலதிபர் கவுதம் கிச்லு என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு  நீல் என்ற ஆண் குழந்தை உள்ளது.தற்போது காஜல் அகர்வால் தனது மகன் நீலுடன் அதிக நேரத்தை செலவிட்டு வருகிறார். அவ்வபோது அந்த தருணங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பகிர்ந்து வருகிறார். 






பாகுபலி ரீ-கிரியேட் :


ராஜமௌளி இயக்கத்தில் பிரம்மாண்டமாக வெளியான பாகுபலி திரைப்படத்தில் ,  பாகுபலி பிறந்ததும் கட்டப்பா , அந்த  குழந்தையின் காலை எடுத்து தனது தலையில் வைத்துக்கொள்வார். அந்த காட்சி பாகுபலி திரைப்படத்தின் ஐகானாகவே பார்க்கப்படுகிறது. அந்த காட்சியை அப்படியே ரீ-கிரியேட் செய்து , தனது மகனின் காலை எடுத்து தனது தலையில்  வைத்து போஸ் கொடுத்துள்ளார் காஜல் அகர்வால் . மேலும் இயக்குநர் ராஜமௌளியை டேக் செய்து “ சார் இது எனது மகன் நீல் . உங்களுக்கு எங்களின் டெடிக்கேஷன். இதை செய்யாமல் எப்படி இருக்க முடியும் “ என குறிப்பிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.




மூவி அப்டேட் :


காஜல் அகர்வால் இந்தியன் 2 திரைப்படத்தில் ஒப்பந்தமாகியிருந்தார். ஆனால் அந்த சமயத்தில் அவர் கர்ப்பமாக இருந்ததால் படத்தில் இருந்து விலகுவதாக கூறப்பட்டது. ஆனால் பல்வேறு காரணங்களால் இந்தியன் 2 திரைப்படம் கிடப்பில் போடப்பட்டது. இந்த நிலையில் காஜல் மீண்டும் படப்பிடிப்பில் கலந்துக்கொள்ளவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. வருகிற செப்டம்பர் மாதம் 13 தேதி காஜல் அகர்வால் மீண்டும் இந்தியன் 2 திரைப்படத்தில் கலந்துக்கொள்ளவுள்ளாராம். இந்தியன் 2 திரைப்படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிப்பார் என கூறப்படுகிறது.