Kajal Aggarwal Video: கர்ப்பிணியாகவே விளம்பர வீடியோவில் நடித்திருக்கும் காஜல்... உடன் நடித்திருக்கும் சிறுவன் யார் தெரியுமா?

கர்ப்பமாக இருக்கும் காஜல் அகர்வால் நடித்திருக்கும் விளம்பரம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகி

Continues below advertisement

கர்ப்பமாக இருக்கும் காஜல் அகர்வால் தற்போது துபாயில் தனது கணவர் கெளதம் கிச்சலுவுடன் வசித்து வருகிறார். அவர் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அந்த வீடியோவில் கர்ப்பமானதால் குண்டாக மாறிப் போன காஜல் அகர்வால்,தனது தங்கை மகனான இஷான் வலேச்சாவுடன் இணைந்து ஓரியோ பிஸ்கட் விளம்பரத்தில் நடித்துள்ளார். இந்த விளம்பரத்தை பார்த்தோர் இது காஜல் அகர்வாலா என்ற கேள்வியை கேட்டு வருகின்றனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

Continues below advertisement

 

தொடர்ந்து முன்னணி நடிகைகளின் பட்டியலில் இருந்த காஜல் அகர்வால், கமல் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வந்த, இந்தியன் 2 படத்தில் நடித்தார். ஆனால் படப்பிடிப்பின் நடுவே நடந்த விபத்தால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து கொரோனா பரவல் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்ட நிலையில், ஷங்கருக்கும் தயாரிப்பாளருக்கும் இடையே நடந்த மோதல் காரணமாக படப்பிடிப்பு மீண்டும் தொடங்காமலே இருந்தது. இதனிடையே 2020 ஆம் ஆண்டு தொழிலதிபர் கெளதம் கிச்சலுவை காஜல் அகர்வால் திருமணம் செய்து கொண்டார். அதனைத் தொடர்ந்து அவர்  கர்ப்பம் தரித்த நிலையில் அந்தப் படத்தில் இருந்து விலகினார்.  

 

Continues below advertisement
Sponsored Links by Taboola