இந்திய சினிமாவில் பல மொழிகளில் சிறந்த நடிப்பை வழங்கியவர்  காஜல் அகர்வால். இறுதியாக இத்துறையில் இருந்து ஓய்வெடுக்கும்  ஒரு முடிவை எடுத்துள்ளார். ஒரு ஆன்லைன் போர்ட்டலுக்கு கொடுத்த பேட்டியில் இதனை பற்றி விளக்கம் அளித்துள்ளார்  காஜல் .




"தனது கணவர் மற்றும் குடும்ப உறுப்பினர்களிடமிருந்து, எனக்கு நல்ல ஆதரவு கிடைத்துவருகிறது என காஜல் அகர்வால் பகிர்ந்துகொண்டுள்ளார். இந்த விஷயம் சினிமாவில் கவனம் செலுத்துவதற்கு மிக எளிதாக உள்ளது என்று குறிப்பிட்டிருந்தார் . மேலும் எவ்வளவு காலம் இது நீடிக்கும் என்பது எனக்கு தெரியவில்லை, எனது கணவர் கெளதம் எப்பொழுது என்னை படங்களில் நடிக்கவேண்டாம் என்று சொல்கிறாரோ அப்பொழுது நான் நடிப்பதில் இருந்து விலகிவிடுவேன்"  என்று கூறியிருக்கிறார்.




”தற்பொழுது நான் எனது வேலையில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறேன் ,மேலும் சில படங்களை நான் முடிக்க வேண்டும் இந்த கொரோனா ஊரடங்கு காரணமாக படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது அவை முடிந்தவுடன் எனது இதரகடமைகளை முடித்துவிட்டு பின்பு எனது முடிவுகளை எடுப்பேன்” என்று கூறியுள்ளார். இது ஒருபுறம் இருக்க, இவர் நடித்த 7 படங்கள் இன்னும் வெளிவராமல் இருப்பது இவரை இந்த முடிவை எடுக்க வைத்து இருக்குமோ என்று பலரும் கேள்வி எழுப்பிவருகிறார்கள். இவர் நடித்த பாரிஸ் பாரிஸ் படத்தின் படப்பிடிப்பு முடிந்து தணிக்கை குழு சர்ச்சையில் சிக்கி நீண்ட நாட்களாக திரைக்கு வராமல் முடங்கியுள்ளது.




ஹேய் சினாமிகா படம் இவர் திருமணத்திற்கு முன்பு நடித்த படம் . சில மாதங்களுக்கு முன்பு அந்த ஷூட்டிங்கை முடித்துவிட்டு தற்பொழுது கொரோனா காரணமாக அந்த படம் இன்னும் வெளிவராமல் உள்ளது .




அதனை தொடர்ந்து இந்தியன் 2 இன்னும் படப்பிடிப்பு முடிக்கமுடியாமல் இயக்குநருக்கும் தயாரிப்பாளர்களுக்கும் பிரச்சனைகள் நடந்துகொண்டு அதன் படப்பிடிப்பும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் தெலுங்கில் த்ரிஷா நடிக்காமல் விலகிய சிரஞ்சீவியின் ஆச்சார்யா படத்தில் நடிக்க காஜல் அகர்வாலை ஒப்பந்தம் செய்தனர். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்தநிலையில், இப்போது கொரோனா பரவலால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்தத் தருணத்தில் இப்படி ஒரு செய்தி ரசிகர்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது சிலர் திருமணத்திற்கு பிறகு அனைத்து நடிகைகளும் செய்வதுதான் இது என்ற விமர்சனத்தையும் முன்வைக்கிறார்கள்.